Terrible accident near Trichy: Bore truck – van clash, 10 killed

திருச்சி அருகே நின்று கொண்டிருந்த போர்வெல் லாரி மீது டெம்போ வேன் மோதிய விபத்தில் 10 பேர் சம்பவத்திடத்திலேயே உயிரிழந்தனர்.

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே திருச்சி – மதுரை நெடுஞ்சாலையின் ஓரத்தில் நேற்றிரவு சுமார் 11.30 மணியளவில் போர்வெல் லாரி ஒன்று நின்றுள்ளது. அப்போது கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் தெற்கு குளம் பகுதியிலிருந்து திருப்பதி நோக்கி வந்து கொண்டிருந்த டெம்போ வேன் ஒன்று எதிர்பாரத நிலையில் நின்று கொண்டிருந்த போர்வெல் லாரியின் பின்புறத்தில் வேகமாக மோதியது.

இதில் வேன் முன்பகுதி முழுவதும் நொறுங்கி சேதமானது. வேனில் பயணித்த 5 ஆண்கள், 7 பெண்கள் மற்றும் 2 குழந்தைகளுடன் சிக்கி கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்தி துவரங்குறிச்சி போலீசார், நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் வேனில் சிக்கியவர்களை மீட்டனர்.

அதில் 5 ஆண்கள், 3 பெண்கள் மற்றும் 2 சிறுவர் சிறுமியர்கள் என 10 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

நிகழ்விடத்துக்கு திருச்சி மாவட்ட கண்காணிப்பாளர் கல்யாண் மற்றும் மணப்பாறை காவல் துணை கண்காணிப்பாளர் ஆசைத்தம்பி ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

படுகாயம் அடைந்த வைஷ்ணவி ( 21 ), தனம்மாள் ( 42 ), வேளாதேவி ( 35 ), கார்த்தி ( 12 ), டிரைவர் ராகேஷ் ( 37 ), ஆகியோர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*


Copyright © 2017 — kalaimalar. All Rights Reserved | kaalaimalarnews@gmail.com | 9003770497

காலைமலர்.காம் Powered By : kaalaimalar.com
error: Content is protected !!