ஒகி புயல் பாதிப்பினை பேரிடராக அறிவிக்க கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டுமென உயர் நீதிமன்ற கிளை இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

வங்க கடலில் கன்னியாகுமரி அருகே நிலைகொண்டிருந்த ‘ஒகி’ புயல் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த மாத இறுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. கொட்டித்தீர்த்த மழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.

இதனை அடுத்து துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் புயல் பாதித்த பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இதேபோன்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கன்னியாகுமரிக்கு வருகை தந்து புயல் பாதித்த பகுதிகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி ஆய்வு மேற்கொண்டார். அவரிடம், ஒகி புயல் பாதிப்பினை தேசிய பேரிடராக அறிவிக்க வலியுறுத்தி மீனவ பிரதிநிதிகள் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், ஒகி புயல் பாதிப்பினை பேரிடராக அறிவிக்க கோரி மனுதாரர் மதுரை ராஜன் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் புயலால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என்றும் மனுதாரர் கோரிக்கை வைத்துள்ளார். அதனை விசாரித்த நீதிமன்றம், புயலால் பாதித்த கன்னியாகுமரியை பேரிடர் பகுதியாக அறிவிப்பது பற்றி டிசம்பர் 20ந்தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*


Copyright © 2018 — kalaimalar. All Rights Reserved | kaalaimalarnews@gmail.com | 9003770497

Kaalaimalar.com : காலைமலர்.காம்
error: Content is protected !!