The guy who refused to watch the porn film was shouting: Car Driver hysteria

தூத்துக்குடி அருகே செல்போனில் ஆபாச படம் பார்க்க மறுத்த மாணவனை கார் டிரைவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பெரிய மணரா நாடார் தெருவைச் சேர்ந்தவர் வீரக்குமார் மகன் கருப்பசாமி (37), கார் டிரைவர். இவர் அப்பகுதியைச் சேர்ந்த 10வது வகுப்பு படிக்கும் மாணவனுடன் நட்பாக பழகி வந்துள்ளார். நேற்று காலை பள்ளிக்கு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்த மாணவனை வழிமறித்து கருப்பசாமி செல்போனில் ஆபாச படம் போட்டு அதனை பார்க்குமாறு வற்புறுத்தினாராம்.

அதற்கு மாணவன் மறுக்கவே அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கருப்பசாமி மாணவனை கத்தியால் குத்தியுள்ளார். மாணவனும் அவரை தாக்கியுள்ளார். காயம் அடைந்த இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஏரல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*


Copyright © 2018 — kalaimalar. All Rights Reserved | kaalaimalarnews@gmail.com | 9003770497

காலைமலர் : kaalaimalar.com
error: Content is protected !!