The Indian Meteorological Department warns that heavy rains will continue till November 4 in Tamil Nadu

தமிழகம் மற்றும் புதுவையில் நவம்பர் 4-ம் தேதி வரை கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று திங்கள்கிழமை அதிகாலை முதல் இரவு வரை சென்னை நகரின் பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னை புறகரான தாம்பரம், சோழிங்கநல்லூர், கூடுவாஞ்சேரி, செங்குன்றம் உள்ளிட்ட இடங்களிலும் பலத்த மழை பெய்தது. நேற்றிரவு முழுவதும் மழை பெய்தது.

திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கன்னியாகுமரி மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர் மழை காரணமாக தாழ்வான இடங்களில் நீர் தேங்கியது. நீர் தேங்கியதால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.

இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் சனிக்கிழமை வரை (நவ.4) கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சாரக்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*


Copyright © 2018 — kalaimalar. All Rights Reserved | kaalaimalarnews@gmail.com | 9003770497

kaalaimalar.com காலைமலர்.காம்
error: Content is protected !!