The monkey went into the house and lifted the baby: People protest against the Forest Department

புவனேஸ்வர் மாநிலத்தில் குரங்கு தூக்கிச் சென்ற பிறந்து 16 நாளே பச்சிளங்குழந்தை மறுநாள் கிணற்றில் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது.

புவனேஸ்வர் மாநிலத்தில் கட்டாக் மாவட்டத்தில் பங்கி அருகே தலப்ஸ்தா கிராமத்தில் குரங்கு தூக்கிச் சென்ற 16 நாள் ஆன குழந்தையை, போலீஸ் மற்றும் வனத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் முழுவதும் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை. உடல் வளைந்து ஒரே ஒரு இடத்தில் மட்டும் காயம் இருந்ததாகவும், 24 மணிநேரம் கிணற்றில் இருந்துள்ளது எனினும் உடலில் வீக்கம் எதுவுமில்லை என நேரில் பார்த்த கிராமவாசி ஒருவர் கூறினார்.

விசாரணையின் பின்னர், பேங்கி மருத்துவமனைக்கு குழந்தையின் உடல் அனுப்பியுள்ளோம். குழந்தை உயிரிழந்ததற்கான காரணம் என்பதை அறிந்துகொள்ள அறுவைசிகிச்சை அறிக்கைக்காக காத்திருக்கிறோம். இக்குழந்தை குறைமாத பிரசவத்தில் அறுவைசிகிச்சை செய்து பிறந்துள்ளது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது, தவிர இக்குழந்தையின் உயிரிழப்பு இயற்கையானதல்ல என்பதையும் வழக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை உயரதிகாரி பிரியாப்ரத் ரூத் தெரிவித்துள்ளார்.

புதிதாகப் பிறந்த குழந்தை குரங்கின் பிடியில் இருந்து விழுந்து விட்டது, கிணற்றில் விழுந்த பின்னர் குழந்தை இறந்து விட்டது. வீட்டுக்குள் வந்த குரங்கு குழந்தையை தூக்கிச் செல்லும்போது, தாயின் அருகில்தான் குழந்தை தூங்கிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. குரங்கு வந்து குழந்தையை தூக்கிக்கொண்டு தப்பிச்சென்றபோது இதற்காக வீட்டில் வைக்கப்பட்டிருந்த எச்சரிக்கை அலாரம் அடிக்கத் தொடங்கியது. இச்சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து கிராம மக்கள் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். இந்நிலையில், குழந்தைத் தேடுவதில் பொறுப்புணர்வு இல்லாமல் வனத்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டியதாகவும் கிராமவாசிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதற்கிடையில் இழப்பீடு கோரி வனத்துறை அலுவலகத்திற்கு எதிரே அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*


Copyright © 2018 — kalaimalar. All Rights Reserved | kaalaimalarnews@gmail.com | 9003770497

kaalaimalar.com காலைமலர்.காம்
error: Content is protected !!