The public announcement regarding redressal camp Perambalur District Supply

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல் :

பொது விநியோகத் திட்டம் சார்ந்த குறைபாடுகளை களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும், சிறப்பு பொது விநியோகத்திட்ட குறை தீர்க்கும் முகாம் 20.01.2018 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் நடைபெற உள்ளது.

பெரம்பலூர் வட்டம், அயிலூர் கிராமத்தில் தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) தலைமையிலும்;, வேப்பந்தட்டை வட்டம் பிரம்மதேசம் கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலும், குன்னம் வட்டம், வடக்கலூர் கிராமத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தலைமையிலும்,
ஆலத்தூர் வட்டம், புஜங்கராயநல்லூர் கிராமத்தில் துணைப்பதிவாளர் பொது விநியோகத்திட்டம், த.பாண்டித்துரை, தலைமையிலும் நடைபெற உள்ளது.

மேற்படி, முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பொதுமக்கள் பயனடைய
கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*


Copyright © 2018 — kalaimalar. All Rights Reserved | kaalaimalarnews@gmail.com | 9003770497

kaalaimalar.com காலைமலர்.காம்
error: Content is protected !!