The Tamil Nadu Chief Minister stalled on the first day of the online prescription system.

தமிழக முதல்வர் தொடங்கிவைத்த ஆன்லைன் பத்திரபதிவு முறையின் முதல் நாளிலேயே இணையதள இணைப்பு கிடைக்காததால் பத்திர பதிவு நடக்காமல் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை சார்பதிவாளர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

பத்திரப்பதிவு துறையில் வெளிப்படை தண்மை இருக்கவேண்டும், இடைத்தரகர்கள் மற்றும் லஞ்சம் லாவண்யம் இல்லாமல் இருக்கவேண்டும் என்பற்காக தமிழகம் முழுவதுமுள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆன்லைன் பத்திர பதிவு முறையை நேற்று முன்தினம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் நடைமுறைக்கு வந்த இந்த ஆன்லைன் பத்திர பதிவு முறையில் ஆவணங்களை தயாரித்து சார்பதிவாளர் அலுவலகத்துக்கு இன்டர்நெட் மூலம் அனுப்ப முயலும்போது அனுப்பவேண்டிய இணையதளம் வேலை செய்யவில்லை. இதனால் இன்று வேப்பந்தட்டை சார்பதிவாளர் அலுவலகத்துக்கு பத்திர பதிவுக்கு வந்த பொதுமக்கள் அனைவரும் ஏமாற்றமடைந்தனர்.

மேலும், சார்பதிவாளர் அலுவலகம் சார்ந்த தொழிலில் ஈடுப்பட்டு வரும் ஆவண எழுத்தர்கள், முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் உள்ளிட்டோரும் தங்கள் அலுவலகங்களை பூட்டி விட்டு சென்றனர். இதனால் எப்போதும் பொதுமக்கள் கூட்டத்தால் பரபரப்பாக காணப்படும் சார்பதிவாளர் அலுவலக வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.

இது குறித்து வேப்பந்தட்டை சார்பதிவாளர் நெடுஞ்செழியனிடம் கேட்டப்போது, இன்று முதல் ஆன்லைன் பத்திரப்பதிவு முறை அமலுக்கு வந்துள்ளது. ஆனால் எங்கள் அலுவலக இணையதள முகவரிக்கு இதுவரை ஒரு கிரைய ஆவணமும் வரவில்லை என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*


Copyright © 2018 — kalaimalar. All Rights Reserved | kaalaimalarnews@gmail.com | 9003770497

காலைமலர் : kaalaimalar.com
error: Content is protected !!