Those who wish to go to the Holy Anthony Festival of Katchatheevu will notify the details of Feb.1

ராமநாதபுரம் : இலங்கை கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழாவிற்கு செல்ல விரும்பும் யாத்திரிகர்கள் தாங்கள் செல்லும் ஒருங்கிணைப்பாளர் யாத்திரிகர்கள் மற்றும் படகுகள் குறித்த அனைத்து விபரங்களையும் உரிய ஆதாரத்துடன் பிப்.1ம் தேதிக்குள் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்திடம் அளித்திட வேண்டும், என கலெக்டர் நடராஜன் அறிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கக்ஷட்ட அரங்கில் கலெக்டர் நடராஜன் தலைமையில் கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் வருகின்ற பிப்.23 மற்றும் பிப்.24ம் தேதிகளில் நடைபெற உள்ள திருவிழாவில் கலந்து கொள்வதற்காக செல்லவுள்ள யாத்திரிகர்களை பாதுகாப்பாக அழைத்து செல்வது குறித்த ஆலோசனை கக்ஷட்டம் நடந்தது. கக்ஷட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கலெக்டர் நடராஜன் பேசியதாவது:

கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் வருகின்ற பிப் 23 மற்றும் 24ம் தேதிகளில் நடைபெற உள்ள திருவிழாவில் கலந்து கொள்வதற்காக செல்லும் யாத்திரிகர்கள் அனைவரும், கச்சத்தீவு யாத்திரைக்கான ஒருங்கிணைப்பாளரரின் தலைமயின் கீழ் மட்டுமே செல்ல அனுமதி உண்டு. அதேவேளையில் ஒருங்கிணைப்பாளர் யாத்திரிகர்கள் மற்றும் படகுகள் குறித்த அனைத்து விபரங்களையும் உரிய ஆதாரத்துடன் பிப் 1ம் தேததிக்குள் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்திடம் அளித்திட வேண்டும்.

மேலும், அரசு அறிவுறுத்தலின்படி, யாத்திரிககர்கள் மீன்பிடி, விசைப்படகுகளின் முலமாக மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மேலும் ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட தவிர பிற மாவட்டங்களில் இருந்து கச்சத்தீவு விழாவிற்கு செல்ல விண்ணப்பிக்கும் நபர்கள் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்திலிருந்து தடையில்லா சான்று பெற்று சமர்பிக்க வேண்டும். மேலும் பாலித்தீன் பொருட்கள், கத்தி, அரகவாள் போன்ற பொருட்களையும் விலங்குகள், மருந்து பொருட்கள், பழங்கள், மரங்கள், மரக்கட்டைகள் போன்றவற்றையும் படகுகளில் எடுத்தது செல்ல அனுமதி இல்லை.

கச்சத்தீவு யாத்திரகைக்காக பயன்படுத்தப்படவுள்ள படகுகளின்உரிமம் மற்றும் காப்பீடு குறித்த விபரங்களை மீன்வளத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்து உறுதி செய்திட வேண்டும். அவசர சுழ்நிலையினை ஏதுவாக யாத்திரிகர்கள் கிளம்பும் இடத்தில் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

யாத்திரிகர்கள் செல்லும் ஒவ்வொரு படகிலும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் மட்டுமே யாத்திரிகர்கள் செல்வதை உறுதி செய்திட வேண்டும். இதுதவிர யாத்திரகைக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் காவல்துறை, இந்திய கடலோர பாதுகாப்பு படை மற்றும் சுங்க துறை சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும், என தெரிவித்தார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி, கடலோர பாதுகாப்பு காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார், பரமக்குடி சப்கலெக்டர் விஷ்ணுசந்திரன், ராமநாதபுரம் ஆர்.டி.ஓ. பேபி, மருத்துவ பணி இணை இயக்குனர் முல்லைக்கொடி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை உட்பட பலர் பங்கேற்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!