Tirupur to avoid food safety awareness program of the Department for Children snacks

திருப்பூரில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு காற்றடைத்த நொறுக்கு தீனிகளை தவிர்க்க உணவு பாதுகாப்பு துறையினர் அறிவுறுத்தினர்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் உணவு பொருட்களில் கலப்படம் செய்யப்படுவது குறித்த பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் உணவு பொருட்களில் கலப்படம் செய்யப்பட்டிருந்தால் அதனை எவ்வாறு கண்டறிவது என்பது குறித்த எளிய செய்முறை விளக்கங்களை பொதுமக்களுக்கு செய்து காட்டினர்.

குழந்தைகள் அதிக அளவில் வாங்கி உண்ணக்கூடிய காற்றடைத்து பாக்கெட் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் நிறம் சேர்க்கப்பட்ட பொருட்களை தவிர்த்து கடலை மிட்டாய் போன்ற எளிய சத்தான பொருட்களை சிறுவர்களுக்கு தருமாறு பெற்றோரிடம் அறிவுறுத்தினர் .

மேலும், நிறங்களை கொண்டு எவ்வாறு கலப்பட பொருட்களை கண்டறிவது என்பது குறித்த விளக்கங்களையும் அளித்தனர்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!