Veppanthattai March 27th, going camping with legal aid and awareness.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மார்ச்.27 அன்று காலை 9.30 மணியளவில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட நிர்வாககத்தின் சார்பில் அரசு வழங்கக் கூடிய நலத்திட்டங்கள், மற்றும் சட்ட உதவிகள் பெறுவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அம்முகாம் நடக்கிறது.

முகாமில், முதியோர் உதவித் தொகை, திருமண உதவித் தொகை, பட்டா பெறுதல், அல்லது மாற்றம் செய்தல், அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்தல், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை பெறுதல் கல்வித் உதவித் தொகை, சட்டம் சார்ந்த பிரச்சனைகளான சிவில், கிரிமினல், மோட்டார் வாகன விபத்து, ஜீவானம்சம் பெறுதல், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், தொழிலாளர் பிரச்சனை, மற்றும் சட்ட உதவி போன்றவைகளுக்கு, மனுக்கள் கொடுத்து பயனடைய கேட்டுக் கொள்ளப்பபடுகிறது.

இம்முகாமில், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சி, உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!