Kaalaimalar.com News Action: Additional rain gauges being set up in Perambalur district; Collector Info!




தமிழகம் முழுவதும் காலநிலை மற்றும் மழையின் அளவினை துல்லியமாக கண்காணிக்கவும், கணக்கிடவும் 1400 தானியங்கி மழைமானிகள் மற்றும் 100 தானியங்கி வானிலை நிலையங்கள் அமைக்க அரசால் ஒப்புதல் வழங்கப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் நிறுவும் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில் தானியங்கி மழைமானிகள் சிறுவாச்சூர், அம்மாபாளையம், மேலப்புலியூர்(மே), கீழக்கரை, வாலிகண்டபுரம், வி.களத்தூர், பசும்பலூர்(வ), நூத்தப்பூர்(வ), பூலாம்பாடி(கி), பேரளி(தெ), அசூர், ஓலைப்பாடி(மே), துங்கபுரம், கிழுமத்தூர்(வ), கண்ணப்பாடி, பாடாலூர்(கி), கூத்தூர் மற்றும் கொளக்காநத்தம் ஆகிய 18 கிராமங்களிலும், தானியங்கி வானிலை நிலையங்கள் பெரம்பலூர், குன்னம் மற்றும் ஆலத்தூர் ஆகிய 3 வட்டங்களிலும் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

பணிகள் முடிவுற்ற பின்னர் புதிய தானியங்கி மழைமானிகள் மற்றும் தானியங்கி வானிலை நிலையங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

கூடுதல் மழைமானி தேவைகுறித்து, காலைமலர்.காம் கடந்த 2019ம் ஆண்டு செப்.24ம் தேதி அன்றும், 2020ம் ஆண்டு நவ.8ம் தேதி அன்றும் செய்திகள் வெளியிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து மழைமானிகள் அமைக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் கூடுதலாக மழைமானி அமைக்க அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை!

பெரம்பலூர் மாவட்டத்தில் கூடுதல் மழைமானிகள் அமைக்க, ஆட்சியருக்கு பொதுமக்கள் கோரிக்கை!


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!