பெரம்பலூர்: பெரம்பலூர் சுற்றுப் பகுதிகளில் நேற்று இரவு இடியுடன் மழை பெய்ததால் பொதுமக்கள் விவசாயிகள் அக்னி வெயிலில் இருந்து தப்பியதாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் தொடர்ந்து கோடை மழை பெய்து வருவதால் பூமி குளிர்ச்சி அடைந்துள்ளது. அதனால் வியர்வையில் அவதிப்பட்ட மக்களுக்கு தட்ப வெப்ப நிலை மாறி உள்ளதால் கோடை காலத்திலும் குளுமையான காற்றை இதமாக மக்கள் அனுபவித்து வருகின்றனர்.
விவசாயிகளும் தாங்கள் பயிரிட்ட கோடைப் பயிர்களுக்கு நீர் இரைப்பதை நிறுத்தி உள்ளதால் கிணற்றுப் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மேலும், வறண்டு காய்ந்து போன நிலத்தில் ஆடு மாடுகளுக்கு புதிய புற்கள் முளைக்க தொடங்கினால் நல்ல தீவனம் கிடைக்கும் என்பதால் கால்நடை வைத்திருப்பவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதனால் பாலின் உற்பத்தியும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் தீவன செலவு பெருமளவு குறையும்.
அக்னி நாளை 29ஆம் தேதியுடன் முடிவடைவதால் நேற்று இரவு பெய்த மழை பூமியை மட்டும் குளிர செய்யாமல் மக்கள் மனங்களையும் குளிர செய்துள்ளது. அப்படா! கடுமையான வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்தோம் என மகிழ்சி அடைந்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்றிரவு பெய்த மழை விவரம் : பெரம்பலூர் 58மி.மீ., 17.4 மி.மீ, தழுதாழை 29 மி.மீ, செட்டிக்குளம் 13.மி.மீ பாடாலூர் 13.மி.மீ. பாடாலூர் 5மி.மீ என மொத்தம் 122.4 மி.மீ மழை பெய்தது. சராசரியாக 24.48.மி;மீ மழையளவு மாவட்டம் முழுவதும் பதிவாகி உள்ளது.