அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு.

schedule
2016-05-13 | 17:24h
update
2026-06-24 | 06:03h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர்: நடைபெற இருக்கும் 2016 சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, தேர்தலை அமைதியாகவும், சுமூகமாகவும் நடத்திட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கும் டாஸ்மாக் கடைகள் முறையாக இயங்குகின்றதா என்பது குறித்து (12.05.16 மற்றும் 13.05.16) ஆகிய நாட்களில் துறை ரீதியிலான ஆய்வு மேற்கொண்டதில் சிறுவாச்சூர் (கடை எண்:6442) அரசு மதுபானக்கடைக்கு முன்பு அங்குள்ள மதுபானக்கூடத்தில் வேலை பார்க்கும் இளவரசன் என்பவரால் கள்ளத்தனமாக மதுவிற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு, அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 3 மது பாட்டில்களுடன் ரூ.300 ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement

அதேபோல், மேலமாத்தூர் இடுகாடு அருகில் அதே ஊரை சேர்ந்த விஜய் என்பவரால் கள்ளத்தனமாக அரசு மதுபானங்களை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு, அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 28 மது பாட்டில்களுடன் ரூ.345 ரொக்கமும்,

பிலிமிசை கிராமத்தில் (கடை எண்:6432) அருகில் பிலிமிசை கிராமத்தை சேர்ந்த காமராஜ்என்பவரால் கள்ளத்தனமாக மதுவிற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு, அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 44 மது பாட்டில்களுடன் ரூ.1,180 ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்டரூ.1,825 ரொக்கம், 75 மதுபாட்டில்கள் மற்றும் தொடர்புடைய நபர்களுடன் பெரம்பலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு, அவர்கள் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.06.2026 - 06:03:43
Privacy-Data & cookie usage: