அரசின் சாதனைகளை வீடு வீடாக சென்று எடுத்துச் சொல்லவேண்டும் : அமைச்சர் வைத்திலிங்கம்

schedule
2015-09-06 | 15:42h
update
2026-06-17 | 01:01h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

அரசின் சாதனைகளை வீடுவிடாக சென்று எடுத்துச்சொல்லவேண்டும் என அதிமுக மாவட்ட ஜெ.பேரவை ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் வைத்திலிங்கம் தெரிவித்தார்.

பெரம்பலூரில் மாவட்ட ஜெ.பேரவை ஆலோசனை கூட்டம் அதன் மாவட்டச் செயலாளர் தலைமையில் நடந்தது.

எம்பிக்கள் சந்திரகாசி, மருதராஜா , எம்.எல்.ஏ. தமிழ்ச்செல்வன், முன்னாள் துணை சபாநாயகர் அருணாசலம், முன்னாள் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரம்பலூர் நகர செயலாளர் ராமசந்திரன் வரவேற்றார்.

கூட்டத்தில் வீட்டு வசதி நகர்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் வைத்திலிங்கம் பேசியதாவது:

ஏழை,எளிய அடிதட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏழை மக்களின் குழந்தைகளும் படிக்கவேண்டும்,அப்படி படித்தால் தான் அவர்களின் வறுமை ஒழியும், வறுமை ஒழிந்தால் தான் நாடு வளரும்.

Advertisement

இதற்காகபள்ளி கல்வித் துறை மற்றும் உயர் கல்வித் துறைக்காக ரூ. 1 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளார்.அதிமுக ஆட்சியில் 53 கலைக்கல்லுõரிகள், 3 வேளாண்மை கல்லுõரிகள், 4 கால் நடை மருத்துவக்கல்லூரி என 60 கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளது.

வரும் 1.1.2016ம் தேதியில்18 வயது பூர்த்தியடையும் அனைவரையும் புதிய வாக்காளர்களாக சேர்க்க வேண்டும், அதற்காக பெரம்பலூர் தொகுதியில் 317பூத்களும், குன்னம் தொகுதியில் 304 பூத்களுக்கும் வாக்கு சேகரிப்பாளர்கள் நியமிக்க வேண்டும். அவர்கள் வரும் 14ம்தேதி முதல் அடுத்த மாதம் 14ம்தேதி வரை புதிய வாக்காளர்கள் சேர்க்க வேண்டும்.

மேலும் அரசு சார்பில் வரும் 20ம்தேதி மற்றும் அடுத்த மாதம் 4ம்தேதிகளில் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

அரசின் சாதனைகளை வாக்கு சாவடி வாரியாக ஒவ்வொருவீடாக சென்று வாக்களர்கள் அனைவரிடத்திலும் நேரடியாக எடுத்து செல்லும் பணியை சிறப்பாக செய்யவேண்டும் என்றார்.

இதில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சகுந்தலா, ஒன்றிய குழுத்தலைவர் ஜெயக்குமார், நகராட்சிதலைவர் ரமேஷ், ஒன்றிய செயலாளர் கர்ணன்,கண்ணுசாமி,கிருஷ்ணசாமி, மாநில மீனவரணி இணை செயலாளர் தேவராஜன், மாவட்ட நிர்வாகிகள் அசோக்ராஜ், பூவைசெழியன், மாவட்ட அணி செயலாளர் எம்.என். ராஜாராம், எசனை பன்னீர்செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 01:01:45
Privacy-Data & cookie usage: