அரசுப்பேருந்து கவிழ்ந்து நடத்துனர் உள்பட 15 பேர் காயம்

schedule
2015-07-09 | 17:46h
update
2026-06-14 | 15:09h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com


பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே இன்று மாலை ஏரிக்கரையில் அரசுப் பேருந்து கவிழ்ந்ததில், நடத்துனர் உள்பட 15 பேர் காயமடைந்தனர்.

Advertisement

பெரம்பலூரிலிருந்து செங்குணம், பீல்வாடி வழியாக வேப்பூருக்கு அரசுப்பேருந்து ஒன்று இன்று மாலை சென்றுக் கொண்டிருந்தது.

செங்குணம் ஏரிக்கரையில் சென்றபோது, சாலை அமைப்பதற்காக கொட்டப்பட்டிருந்த ஜல்லி கற்களால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து கவிழ்ந்தது.

இதில், பேருந்து நடத்துனர் மேலப்புலியூர் கிராமத்தை சேர்ந்த சின்னையன் மகன் துரைக்கண்ணு (45) மற்றும் பேருந்தில் பயணம் செய்த 8 ஆண்கள், 6 பெண்கள் உள்ளிட்ட 15 பேர் காயமடைந்தனர்.

தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, விபத்தில் காயமடைந்த பயணிகளை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.06.2026 - 15:09:58
Privacy-Data & cookie usage: