அரும்பாவூர், பூலாம்பாடி பேரூராட்சி பகுதிகளில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வன் வாக்கு சேகரிப்பு

schedule
2016-05-08 | 01:27h
update
2026-06-23 | 22:05h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

அரும்பாவூர், பூலாம்பாடி பேரூராட்சி பகுதிகளில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வன் வாக்கு சேகரிப்பு

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் இரா.தமிழ்செல்வன் இன்று அரும்பாவூர் மற்றும் பூலாம்பாடி பேரூராட்சிகளுக்கு உட்பட்ட பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேலக்குணங்குடியில் தனது பிரச்சாரத்தை துவங்கிய வேட்பாளர் இளம்பை.தமிழ்செல்வன் பாரதிநகர், மேற்கு மந்தைவெளி, பூபதிகுட்டை, சின்னமந்தைவெளி, மாரியம்மன் கோவில் தெரு, காந்தி நகர், கடம்பூர், பூலாம்பாடி புதூர் ஆகிய கிராமங்களில் வீதி, வீதியாக நடந்தும், வாகனத்தில் சென்றும் பொது மக்கள் மற்றும் முதியவர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

Advertisement

பிரச்சாரத்தின் போது, அதிமுக அரசின் 5 ஆண்டு கால சாதனைகளை விளக்கி பேசிய வேட்பாளர் அரும்பாவூர் மற்றும் பூலாம்பாடி பேரூராட்சி பகுதியில் பொதுமக்கள் முன் வைத்த குடிநீர், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளை செயல்படுத்தி உள்ளதாகவும், நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலைக்கு வாக்களித்து தன்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்தால் உங்களில் ஒருவனாக இருந்து பணியாற்றுவேன் என்றும் உறுதியளித்து வாக்கு கேட்டு பேசினார்.

முன்னதாக இன்று காலை அரும்பாவூர்-மேட்டூர் பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர் :

சின்ன முட்லு நீர் தேக்கம், மற்றும், அ.மேட்டூர்,பூலாம்பாடி பகுதிக்கு அதிமுக அரசு சார்பில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தும் வாக்கு சேகரித்தார்.

இந்த பிரச்சாரத்தின் போது கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட பலர் உடனிருந்தனர். வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளருக்கு கட்சி தொண்டர்கள் உள்ளிட்ட அந்தந்த பகுதி பொது மக்கள் வெடி வெடித்தும்,சால்வை அணிவித்தும், நடனமாடியும், ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்தும் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
23.06.2026 - 22:06:04
Privacy-Data & cookie usage: