அவ்வையார் விருது பெற தகுதியானவர்கள் கருத்துருக்கள் அனுப்பலாம்: பெரம்பலூர் கலெக்டர்!

schedule
2021-12-22 | 08:04h
update
2021-12-22 | 08:04h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Those who are eligible for the Avaiyar award can send details: Perambalur Collector!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கட பிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

Advertisement

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மாவட்ட சமூக நல அலுவலகம் மூலம் வழங்கப்படும் 2021-2022-ம் ஆண்டுக்கான அவ்வையார் விருது வழங்கும் பொருட்டு தகுதியானவர்கள் கருத்துருக்கள் அனுப்பி வைக்கலாம். இவ்விருது பெற கருத்துரு அனுப்பும் நபர்கள் தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். சமூக நலனை சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு,
கலை அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றுபவராக இருத்தல் வேண்டும். இவ்விருதிற்கான கருத்துருக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், பெரம்பலூர் 621 212 என்ற முகவரிக்கு 24.12.2021 அன்று மாலை 5.30 மணி வரை அனுப்பி வைக்கலாம். மேலும் விவரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தை 8838872443 மற்றும் 7502034646 என்ற கைபேசி எண்களை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.06.2026 - 05:27:42
Privacy-Data & cookie usage: