இடி, மின்னல் தாக்கிய குடுமப்தினருக்கு பேரிடர் நிவாரண உதவிக்கான நிலுவைத் தொகையினை வழங்கினார்: மாவட்ட ஆட்சியர்

schedule
2015-11-30 | 16:57h
update
2026-06-18 | 13:57h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தரேஸ்அஹமது தலைமையில் திங்கட்கிழமைதோறும் நடக்கும் பொதுமக்கள் குறைத்தீர் கூட்டம் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை, பட்டா மாற்றம், தொழில் துவங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப் பட்டா, உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்களிடம் நேரிடையாக மனு கொடுத்தனர்.

Advertisement

393 மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் மனுக்களை சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் அளித்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார். மேலும் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, தகுதியான அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் விரைவாக சென்றடையுமாறு பணியாற்றிட வேண்டும் என்று அரசுத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் ஆலத்தூர் வட்டம், பாடாலூர் கிராமத்தை சேர்ந்த சிதம்பரம் என்வரின் மனைவி சின்னம்மாள், மகன் சிதம்பரம் ஆகியோர் கடந்த அக்.28 தேதி அன்று மழை பெய்த போது இடிமின்னல் தாக்கி இறந்ததை தொடர்ந்து மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வீதம் ரூ.3 லட்சத்திற்கான காசோலையை சென்ற வாரம் அவர்ளுக்கு வழங்கியதை தொடர்ந்து மீதமுள்ள நிலுவைத்தொகை தலா ரூ.2 லட்சத்து ,50 ஆயிரம் வீதம் ரூ.5 லட்சத்திற்கான காசோலையை அவர்களது உறவினர்களிடம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஸ்அஹமது வழங்கினார், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.06.2026 - 13:57:40
Privacy-Data & cookie usage: