பெரம்பலூர் மாவட்டத்தில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் மூலம் பயிர்கடன் வழங்க சிறப்பு முகாம் ஜுலை 1 முதல் ஜுலை 21 வரை வருவாய் கிராமங்கள் வாரியாக சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் நடத்தப்பட்டு வருகிறது.

01.07.2015 முதல் 16.07.2015 வரை 12 நாட்கள் நடைபெற்றதில் 1260 விவசாயிகள் கலந்துகொண்டு ரூ.750 இலட்சத்திற்கு 87 ஆயிரத்திற்கான பயிர் கடனுக்கு விண்ணப்பித்து உள்ளனர்.

மேலும், இந்த வாரத்தில் 17.07.2015 அன்று பெரம்பலூர் வட்டத்தில் பெரம்பலூர்(வ), பெரம்பலூர்(தெ) ஆகிய கிராமங்களிலும்,

குன்னம் வட்டத்தில் பேரளி(வ), கீழப்பெரம்பலூர், பெரியம்மாபாளையம் ஆகிய கிராமங்களிலும்,

ஆலத்தூர் வட்டத்தில் கூத்தூர், பாடாலூர்(கி) ஆகிய கிராமங்களிலும்,

வேப்பந்தட்டை வட்டத்தில்; வேப்பந்தட்டை(தெ), தொண்டப்பாடி ஆகிய கிராமங்களிலும் முகாம் நடைபெற உள்ளது.

அடுத்த வாரத்தில் 20.07.2015 அன்று குன்னம் வட்டத்தில் பேரளி(தெ), வயலப்பாடி, வரகூர் ஆகிய கிராமங்களிலும் முகாம் நடைபெற உள்ளது.

21.07.2015 அன்று குன்னம் வட்டத்தில் ஒதியம், திருமாந்துரை ஆகிய கிராமங்களில் முகாம் நடைபெற உள்ளது.

எனவே பயிர்கடன் பெற விரும்பும் அனைத்து விவசாயிகளும் அன்மையில் பெற்ற கணினி சிட்டா, அடங்கல், குடும்ப அட்டை நகல், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியிலிருந்து பெறப்பட்ட தடையின்மை சான்று, தங்களது சேவை வங்கியில் சேமிப்பு கணக்கு இருப்பின் சேமிப்பு கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், பாஸ்போட் அளவு புகைப்படம் 2 எண்கள் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் அட்டை, ஆதார் அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்று இரு நகல்களுடன் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்றும்,

மேற்கண்ட சான்றுகள் எளிதில் பெற வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய்த்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் முகாம் நாளில் கலந்துகொள்ள உள்ளார்கள்.

விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி குறைந்த வட்டியில் பயிர்கடன் பெற்று பயனடையுமாறு தொpவிக்கப்படுகிறது. மேலும்; 2015-2016ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட பயிர்வாரியான கடன் அளவு அடிப்படையிலேயே பயிர்க்கடன் வழங்கப்படுகிறது.

இதுவரை பயிர்க்கடன் பெறாத விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதற்கு முன்னர் பயிர்க்கடன் பெற்றிருந்தால் அக்கடனை உரிய காலத்தில் திருப்பி செலுத்தியிருக்க வேண்டும்.

எனவே அன்றைய தினம் பயிர்க்கடன் தேவையுள்ள அனைத்து விவசாயிகளும் முகாமில் கலந்துகொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி குறைந்த வட்டியில் பயிர்கடன் பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சிளர் (பொ) மீனாட்சி தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2021 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for Tamil Daily News -Kalaimalar.

error: Content is protected !!