இன்று அண்ணா பிறந்தா நாள்: பெரம்பலூரில், அதிமுகவினர் முன்னாள் எம்.எல்.ஏ ஆர்.டி.ராமச்சந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை!

schedule
2021-09-15 | 06:43h
update
2021-09-16 | 14:05h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Today is Anna’s birthday: In Perambalur, the AIADMK led by former MLA RD Ramachandran paid Respectful by wearing an Garland!

முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 113 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான ஆர்.டி.ராமசந்திரன் தலைமையில் அதிமுக கட்சியினர், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணாவின் உருவசிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், முன்னாள் எம்.எல்.ஏ இளம்பை இரா.தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளர்கள் செல்வகுமார் (பெரம்பலூர்), கர்ணன் (ஆலத்தூர் கிழக்கு), சிவப்பிரகாசம், (வேப்பந்தட்டை மேற்கு) ரவிச்சந்திரன், (வேப்பந்தட்டை கிழக்கு ) செல்வமணி, (வேப்பூர் வடக்கு) மாவட்ட இணைச் செயலாளர் ராணி, மாவட்ட மகளிரணி செயலாளர் ராஜேஸ்வரி, அண்ணா தொழிற்சங்க செயலாளர் வீரபாண்டியன், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் கருணாநிதி, பெரம்பலூர் நகர செயலாளர் இராஜபூபதி, பேரூர் செயலாளர்கள் செல்வராஜ் (குரும்பலூர்), வினோத் (பூலாம்பாடி), பாசறை செயலாளர் இளஞ்செழியன், குரும்பாபாளையம் நாகராஜன், எசனை பன்னீர்செல்வம், கீழப்புலியூர் பத்ராசெல்வம், பாளையம் சரவணன், ஆகியோர் கலந்து கொண்டனர். கிராமங்கள் தோறும் கிளைகளில் அண்ணா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 07:11:02
Privacy-Data & cookie usage: