இயக்குனர் கவுதமனுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

schedule
2018-07-12 | 14:58h
update
2026-04-03 | 02:53h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

இயக்குனர் கவுதமனுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னையில் கடந்த ஏப்ரல் மாதம் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஐபிஎல் போட்டிகள் நடத்தக்கூடாது என்று கூறியும் பல்வேறு அமைப்பினர் சென்னை சேப்பாக்கத்தில் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். சட்ட ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் விதமாக போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி கவிஞர் வைரமுத்து, இயக்குனர் பாரதிராஜா, நாம் தமிழர் கட்சி ஒருகிணைப்பாளர் சீமான் மற்றும் திரைப்பட இயக்குனர் கௌதமன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதையடுத்து, ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் கவுதமன் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கவுதமனுக்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மறு உத்தரவு வரும் வரை அரியலூரில் தங்கி இருக்கவேண்டுமென்ற நிபந்தனையையும் விதித்துள்ளது.

Advertisement

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.04.2026 - 02:53:23
Privacy-Data & cookie usage: