பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வல்லாபுரம்
பிரிவு பாதையில் உள்ள வேளாண்மை அறிவியல் மையத்தில் நபார்டு வங்கி நிதி உதவியுடன் சிறுவாச்சூரை சேர்ந்த தொண்டு நிறுவனம் சார்பில் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள சிறு,குறு விவசாயிகளுக்கு நிலையான இயற்கை வேளாண்நடைமுறைகள் பற்றி விழிப்புணர்வு ஊக்குவிப்பு பயிற்சி நடைபெற்றது.
இந்த பயிற்சி வகுப்பிற்கு நபார்டு வங்கியின் துணைபொது மேலாளர் நவீன்குமார் தலைமை வகிததார். ஐடிபிஐ துணை பொது மேலாளர் முன்னிலை வகித்தார்.
பயிற்சில் மண்புழு உரம், அசோலா உற்பத்தி முறைகள், தொல்லுயிரி கரைசல் பயிர் ஊக்கி, பஞ்சகவ்யம், கனக ஜீவாமிர்தம், ஜீவாமிர்தம், அரப்பு மோர் கரைசல் மற்றும் இயற்கை பூச்சு விரட்டிட வேம்பு கரைசல் உட்பட குறைந்த செல்வில் இயற்கை இடு பொருட்களை கொண்டு, பயிர்களின் வளர்ச்சியை மேம்படுத்தி, விவசாயிகள் மத்தியில் உற்பத்தி திறனை அதிப்படுத்துவதற்கு
பயிற்சி அளிக்கப்பட்டது.
300க்கும் மேற்பட்பட்ட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.