இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஜூன் 15 வரை மாணவர் சேர்க்கை

schedule
2015-05-19 | 16:33h
update
2026-04-16 | 09:49h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர்: இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஜூன் 15 வரை மாணவர் சேர்க்கை நடைபெறும்.

இதுகுறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 6 முதல் 14 வயதுக்குள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், தரமான இலவச தொடக்கக் கல்வி அளிக்க வேண்டும். அனைத்து தனியார் சுயநிதி, மெட்ரிக் மற்றும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் சேர விரும்பும் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் பிரிவின் கீழ் உள்ள மாணவர்கள், ஆதிதிராவிடர், மலைவாழ் பிரிவினர், மிகவும் பிற்பட்ட, பிற்படுத்தப்பட்ட பிரிவினர், பெற்றோர் இல்லாத குழந்தைகள், இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் மூலம் மாணவ, மாணவிகளை சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
மேலும், எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டோர், திருநங்கையர், துப்புரவு தொழிலாளர் குழந்தைகள் மற்றும் நலிவடைந்த பிரிவினர் (ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்குள் பெறுவோர்) தொடக்க நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீத சேர அனுமதி கோருபவர்கள் எல்.கே.ஜி, முதல் வகுப்பில் சேர விரும்பும் பள்ளியிலிருந்து 1 கி.மீட்டர் தொலைவிற்குள் வசிப்பவர்கள் ஆகியோர் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் மூலம் மாணவ, மாணவிகளை சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்ப படிவங்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகள், முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகம், மாவட்டக் தொடக்கக் கல்வி அலுவலகம், உதவிக் தொடக்கக் கல்வி அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் பெற்று பூர்த்தி செய்து உரிய அலுவலரிடம் தேவையான சான்றிதழ் பெற்று விண்ணப்பத்துடன் இணைத்து ஜூன் 15 ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் ஒப்படைக்க வேண்டும்.
குறிப்பிட்ட ஒதுக்கீட்டுக்கு மேல் விண்ணப்பங்கள் பெறப்பட்டால் குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கான இட ஒதுக்கீடு சிறுபான்மை பள்ளிகளுக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.04.2026 - 09:49:29
Privacy-Data & cookie usage: