பெரம்பலூர் : குரும்பலூர் அருகே உள்ள ஈச்சம்பட்டி கிராமத்தில் குடிநீர் கேட்டு பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈச்சம்பட்டி கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இவர்களின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கிட கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பொது மக்கள் பங்களிப்புடன் குரும்பலூர் பேரூராட்சி சார்பில் ஈச்சம்பட்டியில் கிணறு தோண்டப்பட்டது.

புதியதாக தோண்டப்பட்ட கிணற்றில் ஊற்று அதிகமாக இருந்ததால் பக்கத்து ஊரான குரும்பலூர் பேரூராட்சியில் ஏற்பட்ட குடிநீர் தட்டுப்பாட்டை போக்கிட பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள்வேண்டுகோளுக்கு இனங்க ஈச்சம்பட்டி கிராமத்தில் தோண்டப்பட்ட கிணற்றில் இரண்டு மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டு இரண்டு ஊர்களுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதனிடையே குரும்பலூர் பேரூராட்சியில் புதியதாக கிணறு தோண்டப்பட்டு பொது
மக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஈச்சம்பட்டி கிராமத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்கிட குரும்பலூர் பேரூராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து குரும்பலூர் பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் குடிநீர் விநியோகத்தை சீர் செய்ய எவ்வித நடவடிக்கையும் இல்லை என தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ஈச்சம்பட்டி கிராம மக்கள் இன்று ஒன்று திரண்டு கிராமத்திலிருந்து குரும்பலூருக்கு தண்ணீர் விநியோகம் செய்தது போன்று, குரும்பலூரிலிருந்து தங்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி பெரம்பலூர் துறையூர் சாலையில் இன்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போராட்டம் குறித்து தகவலறிந்த வருவாய்த்துறையினர் தாசில்தார் செல்வராஜ் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் குமரன் மற்றும் பெரம்பலூர் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு குடிநீர் விநியோகத்தை சீர் செய்ய சநடவடிக்கை எடுப்பதாக உறுத்தியளித்ததை தொடர்ந்து போராட்டம்
கைவிடப்பட்டது.

இந்த திடீர் சாலைய மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!