பெரம்பலூர் சட்டப் மன்ற தொகுதிக்கு உட்பட்ட அன்னமங்கலம் பிரிவு சாலை அருகே பறக்கும் படை அலுவலர், வட்டாட்சியர் மருதைவீரன் தலைமையில் நடைபெற்ற வாகன சோதனையின் போது பெரம்பலூர் ஸ்ரீரெங்கா நகரை சேர்ந்த அப்துல்பாரி என்பவரால் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான ரொக்கம் இன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்டுள்ள ரொக்கப் பணம் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் ரா.பேபியிடம் ஒப்படைக்கப்பட்டது.