உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட அரசு நெல் கொள்முதல் நிலையத்தின் ரூ. 4 லட்சத்து 34 ஆயிரத்து 120 பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை

schedule
2016-05-11 | 17:57h
update
2026-06-04 | 03:24h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் அருகே உரிய ஆவனங்கள் இன்றி இரு சக்கர வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 4 லட்சத்து 34 ஆயிரத்து 120 ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை யொட்டி தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே தொண்டமாந்துறை பிரிவு சாலை பகுதியில் பிடிஓ.,ரெங்கநாதன் தலைமையில், தலைமை காவலர் முத்துகுமார் உள்ளிட்ட மத்திய தொழிற்பாதுகாப்பு படை போலீசார் அடங்கிய பறக்கும் படையினர் நேற்று வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

Advertisement

அப்போது அவ்வழியே வந்த ஒரு டூவீலர் மறித்து சோதனையிட்டதில் தொண்டமாந்துறை கிராமத்தை சேர்ந்தவரும், தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேசன் நிறுவனத்தின் கீழ் இயங்கும் நெல் கொள்முதல் நிலையத்தில் தற்காலிகமாக பணியாற்றும் பாலகிருஷ்ணன் மகன் வரதராஜன்(31) என்பவர் உரிய ஆவனங்கள் இன்றி 4 லட்சத்து 34 ஆயிரத்து 120 ரூபாயை கொண்டு வந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர். பெரம்பலூர் வருவாய் கோட்டாச்சியர் பேபி மூலம் அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

இதனிடையே டிஎன்எஸ்டிசி அரசு நெல் கொள்முதல் நிலையத்திற்குட்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.06.2026 - 03:24:55
Privacy-Data & cookie usage: