-Power Shutdown to Esanai, Veppanthattai, Arumbavur, Poolambadi Surrounds Areas, TNEB Announcement


தமிழ்நாடு மின்வாரியம் விடுத்துள்ள அறிவிப்பு : 


பெரம்பலூர் கோட்டததிற்கு உட்பட்ட, எசனை துணை மின் நிலையத்தில் நாளை (ஜன.21)  திங்கள் கிழமை பராமரிப்பு பணி காரணமாக மின்  வினியோம் நிறுத்தம் செய்யப்படுகிறது.


இதன் காரணமாக எசனை துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட கோனேரிப்பாளையம், சொக்கநாதபுரம், ஆலாம்பாடி, எசனை, செஞ்சேரி, கீழக்கரை,  பாப்பாங்கரை, இரட்டைமலை சந்து, அனுக்கூர், சோமண்டப்புதூர், வேப்பந்தட்டை, பாலையூர், மேட்டாங்காடு, திருப்பெயர், கே.புதூர், மேலப்புலியூர், நாவலூர் ஆகிய  கிராமங்கள் மற்றும் எசனை துணைமின்நிலையத்திற்கு உட்பட்ட மின் பகிர்மான பகுதிகளில் காலை 8.45 மணி முதல் பராமரிப்பு பணிகள்  நிறைவடையும் வரை மின்வினியோகம் இருக்காது என்றும்,


இதே போன்று அ. மேட்டூர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் ஜன. 22 செவ்வாய்க் கிழமை நடைபெறுகிறது. 


அதனால்,  மலையாளப்பட்டி, கொட்டாரக்குன்று, பூமிதானம், கோரையாறு, கவுண்டர்பாளையம், அ.மேட்டூர், அரும்பாவூர், பூலாம்பாடி, பெரியசாமி கோவில், மேலக்குணங்குடி, வேப்படி, பாலக்காடு, சீனிவாசபுரம், கள்ளப்பட்டி, கடம்பூர் ஆகிய ஊர்களில்  நாளை  காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சார வினியோகம் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2021 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for Tamil Daily News -Kalaimalar.

error: Content is protected !!