PER07Darezஇது குறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர். தரேஸ் அஹமது தெரிவித்துள்ளதாவது:

சென்ற ஆண்டு பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் தாங்கள் பயிர் செய்த பருத்தி பஞ்சு மகசூலை பெரம்பலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு அதிக அளவில் கொண்டு வந்து விற்பனை செய்து நல்ல விலையும் அதன் மூலம் கூடுதல் வருமானமும் பெற்றனர். அதே போல நடப்பு ஆண்டு பருத்தி மற்றும் மக்காச்சோள விற்பனையை ஒழுங்கு முறை கூடத்தில் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர; மாவட்டத்தில் இந்த ஆண்டு மக்காச்சோளம் 51,500 ஹெக்ட்ரிலும் பருத்தி 20,300 ஹெக்டரிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம் மற்றும் பருத்தி 2016 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் அறுவடைக்கு வரும்பொழுது விவசாயிகள் தங்களது விளைபொருளை பெரம்பலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்து பயன்பெறாலாம். மேலும் உள்;ளுரில் தனியாரிடம் விற்பனை செய்யும் போது எடையில் ஏற்படும் குளறுபடிகளை தவிர்த்து சரியான எடையும் போட்டி மூலம் அதிக விலையும் பெற முடியும்.

அருகில் உள்ள அரியலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு அம்மாவட்ட விவசாயிகள் மக்காச்சோள விளைபொருளை பல ஆண்டுகளாக கொண்டு வந்து விற்பனைசெய்து வருகின்றனர். எனவே நம் மாவட்டத்திலும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு மக்காச்சோளத்தினை விவசாயிகள் கொண்டுவந்து விற்பனை செய்யும் பட்சத்தில் அதிக லாபம் ஈட்ட முடியும்.

மக்காச்சோளத்தை மூட்டைகளாக பிடிக்கும் போது 100 கிலோ கொண்ட மூட்டைகளாக பிடிக்காமல் அதே பெரிய சாக்கு பைகளில் 40கிலோ அல்லது 50கிலோ கொண்ட சிறிய மூட்டைகளாக பிடிக்கவேண்டும் அவற்றை வண்டியில் பாரம் ஏற்றவும், தூக்கி இறக்கவும் எளிதாக இருக்கும்.

இதற்கு அதிக விலையுள்ள புதிய கோணிப்பைகளை பயன்படுத்த வேண்டியதில்லை. மாறாக நல்ல நிலையில் உள்ள விலை குறைவான பழைய கோணிசாக்குகள் , கழுவி சுத்தம் செய்ய்ப்பட்ட உர சாக்குகள் மற்றும் சிமெண்ட் சாக்குகள் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

பெரம்பலூர், ஆத்தூர், துறையூர், அரியலூர், திருச்சி போன்ற ஊர்களில் உள்ள சாக்கு வியாபாரிகளிடமிருந்து ஒருமுறை அல்லது இரண்டுமுறை பயன்படுத்தப்பட்ட கோணிசாக்குகள் ,சிமெண்ட் சாக்குகள் மற்றும் உர சாக்குகளை இப்போதிருந்தே கொள்முதல் செய்து இருப்புவைத்திட வேண்டும்.

எனவே எதிர்வரும் அறுவடை பருவத்தில் மக்காச்சோளம் மற்றும் பருத்தி மகசூலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு விவசாயிகள் கொண்டுவந்து விற்பனை செய்து பயன் பெறவேண்டும், என இவ்வாறு தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2021 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for Tamil Daily News -Kalaimalar.

error: Content is protected !!