பெரம்பலூர் மாவட்டத்தில் திங்கள்கிழமைதோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியர் (பொ) மீனாட்சி தலைமையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப்பட்டா, உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 444 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் அளித்தனர்.
இக்கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் காவல்துறையில் பணிபுரிந்து பணியிடையில் மரணம் அடைந்த அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் ஏற்கனவே நான்கு நபர்களுக்கு கிராம நிர்வாக அலுவலர் பணி வழங்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து இன்று மேலும் நான்கு நபர்களுக்கு அவரவர் விருப்பத்தின் அடிப்படையில் அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் (பொ) மீனாட்சி வழங்கினார். அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர் .