பெரம்பலூர் : பெரம்பலூரில் கரும்புக்கான நிலுவைத் தொகை வழங்கக் கோரி விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் காதுகளை பொத்தி நூதன முறையில் விவசாயிகள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் சார் ஆட்சியர் மதுசூதன் தலைமையில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கரும்புக்கான நிலுவைத் தொகை கேட்டு பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும், தமிழக அரசின் காதுக்கு எட்டவில்லை என்பதை வலியுறுத்தும் விதமாக விவசாயிகள் காதுகளை மூடி நூதன முறையில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்நிலையில் பெரம்பலூர் அரசு சர்க்கரை ஆலையில் பெரம்பலூர் அரசு சர்க்கரை ஆலையில் கடந்த அரவைப் பருவத்திற்கு வெட்டி அனுப்பிய கரும்பிய கரும்புக்கான நிலுவைத் தொகை சுமார் 39 கோடியை ஆலை நிர்வாகம் இதுவரை வழங்கவில்லை. இதனால், விவசாயிகள் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுக்குறித்து விவசாயிகள், பல முறை ஆலை நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் பணம் வழங்க நடவடிக்கை எடுக்காததால் உண்ணாவிரதம், விவசாயிகள் குறைத்தீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்தும், சாலைமறியல் செய்தும், தங்களது கோரிக்கையை அரசின் காதுக்கு எட்டவில்லை என்று கருதிய விவசாயிகள், இன்று ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைத் தீர்க்கும் கூட்டத்தில் தங்களது காதுகளை பொத்திக் கொண்டு நூதன முறையில் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
மேலும், ஆலையில், துவங்கப்படாத இணை மின் உற்பத்தி திட்டத்தை உடனடியாக துவக்க வேண்டும், தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும், என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கைகளை முன் வைத்தனர். இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகிளல் இருந்து விவசாயிகள் மற்றும் விவவாய சங்க பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.