mcp-kalpadiகல்பாடியில் மனுநீதி நாள் நிறைவு விழா :110 பயனாளிகளுக்கு ரூ.19 லட்சத்து 82 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிககள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

பெரம்பலூர்: கல்பாடியில் மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி தலைமையில் இன்று மனுநீதி நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த முகாமில் 15 நபர்களுக்கு இயற்கை மரண உதவித்தொகையாக ரூ.1 லட்சத்து 87 ஆயிரத்து 500 க்கான காசேலைகளையும், 87 நபர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் மதிப்பில் ரூ.17 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்களையும், 3 நபர்களுக்கு நத்தம் பட்டா மாற்றத்திற்கான ஆணைகளையும், 4 நபர்களுக்கு குடும்ப அட்டைகளையும், வேளாண்துறையின் சார்பில் ரூ.55,000 மதிப்பிலான உழவு உருளை ஒரு நபருக்கும் என பல்வேறு திட்டங்களின் கீழ் மொத்தம் 110 நபர்களுக்கு ரூ.19 லட்சத்து 82 ஆயிரத்தி 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி வழங்கினார்.

இம்முகாமில் வருவாய்த்துறை, வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கொண்டனர்.


Copyright 2015 - © 2023 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!