பெரம்பலூர் மாவட்டத்தில் 2015-16 கல்வியாண்டிற்கான கல்விக்கடன் வழங்கும் மூன்றாவது கட்ட முகாம் இன்று 22.08..2015 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இம்முகாமில் 11 நபர்களுக்கு கடனுதவி வழங்குவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் தரேஸ்அஹமது வழங்கினர்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:

ஏழை, எளிய மக்களி;ன் குழந்தைகள் உயர்கல்வி கற்க கல்விக்கடன் பெறுவதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கல்விக்கடன் முகாம் ஆண்டு தோறும் ஏற்பாடு செய்து கல்விக் கடன் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் முதல் கல்விக் கடன் முகாம் 25.07.2015 அன்று பெரம்பலூர் மற்றும் வேப்பூர் ஒன்றியங்களுக்கு உட்ப்பட்ட மாணவ, மாணவிகளுக்கான கல்வி கடன் முகாம் நடைபெற்றது. இரண்டாவது கட்டமாக 08.08.2015 அன்று ஆலத்தூர் மற்றும் வேப்பந்தட்டை உள்ளிட்ட ஒன்றியப் பகுதிகளுக்கும் நடத்தப்பட்டது.

இன்று (22.08.2015) மூன்றாம் கட்டமாக அனைத்து பேரூராட்சி, ஒன்றியங்களை சேர்ந்தவர்களுக்கும், நகராட்சி பகுதிக்குட்டவர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடத்தப்பட்டது.

இன்றைய தினம் நடைபெற்ற மூன்றாம் கட்ட கலந்தாய்வில் மருத்துவம் பயிலும் 14 நபர்களும், பல் மருத்துவம் பயிலும் 02 நபர்களும், கால்நடை மருத்துவம் பயிலும் 2 நபர்களும், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் பயிலும் 203 நபர்களும், மேலாண்மை துறையில் பயிலும் 21 நபர்களும், மற்றும் பிற பாடப்பிரிவுகளில் பயிலும் இதர நபர்களும் என மொத்தம் 347 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு ரூ. 10.03 கோடி மதிப்பிலான கடனுதவி கேட்டு விண்ணப்பம் அளித்திருந்தனர்.

இவர்களில் முறையான ஆவணங்கள், கல்வி தகுதி ஆகியவை சரிபார;க்கப்பட்டு தகுதியான நபர;களுக்கு விரைவில் கல்வி கடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இன்று ரூ.10 இலட்சம் மதிப்பிலான கடனுதவிக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் தரேஸ்அஹமது மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.

மேலும் மூன்று கட்டங்களாக நடைபெற்று வந்த கல்விக்கடன் முகாம்களில் மருத்துவத்துறையில் பயிலும் 36 நபர்களும், 536 பொறியியல் பயில்பவர்களும், 103 பாலிடெக்னிக் மாணவ, மாணவிகளும், 37 தொழில்நுட்பம் பயில்பவர்களும், பிறத்துறை சார்ந்த இதர நபர்களையும் சேர்த்து மொத்தம் 937 நபர்கள் ரூ.28.38 கோடி மதிப்பிலான கடனுதவி கேட்டு விண்ணப்பம் செய்துள்ளனர்.

விண்ணப்பம் செய்தவர்களின் முறையான ஆவணங்கள், கல்வி தகுதி ஆகியவை சரிபார்க்கப்பட்டு தகுதியான நபர்களுக்கு விரைவில் கல்வி கடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அருள்தாசன், கார்ப்பரேசன் வங்கி மேலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கு கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!