கல்வி கடனுக்கான மத்திய அரசின் வட்டி மானிய திட்டம் மூலம் மாணவர்கள் பயன் பெறலாம் : ஆட்சியர் தகவல்.

schedule
2015-09-10 | 14:45h
update
2026-04-14 | 10:27h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் ; கல்வி கடனுக்கான மத்திய வட்டி மானிய திட்டம் மூலம் மாணவர்கள் பயன் பெறலாம் : ஆட்சியர் தகவல்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் கல்வி கடன் பெற்று தொழிற்கல்வி (Professional & Technical Courses) பயின்று வரும் மாணாக்கா;கள் மற்றும் பெற்றோர்கள் கவனத்திற்கு மத்திய வட்டி மானிய திட்டத்தின் கீழ் (CSIS) வட்டி மானியம் வழங்கிட இந்தியன் பேங்கர்ஸ் அசோசியசன் மூலம் அனைத்து வங்கிகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் வங்கிகள் வட்டி மானியம் வழங்கி வருகின்றனர்.

Advertisement

இதன்படி. 01.04.2009 முதல் 31.03.2014 வரை கல்வி கடன் பெற்று தொழிற் கல்வி பயின்று வரும் மாணாக்கா;கள் தங்களது கல்வி கடனுக்கான வட்டி மானியத்தினை சம்பந்தப்பட்ட வங்கிகளில் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த வட்டி மானிய சலுகையானது ஆண்டு வருமான வரம்பின் அடிப்படையில் அந்தந்த வங்கிகளின் மூலமாக சம்பந்தப்பட்ட நபர்களது கடன் கணக்கில் செலுத்தப்படும். மேலும் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் பயின்ற மாணவர்களுக்கு மட்டும் இச்சலுகையானது வழங்கப்படும்.

பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் தங்களது கல்வி கடன் பெற்ற தருணத்தில் வருமான சான்றிதழ் தாக்கல் செய்திருக்கவில்லை எனில், உடன் சம்பந்தப்பட்ட வங்கியினை அனுகி வருமான சான்றிதழை சமர்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஏற்கனவே வருமான சான்றிதழ் சமர்பித்துள்ளவர்கள் தங்களது வங்கி மேலாளரை அணுகி விவரம் பெற்றுக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளாரை தொடர்பு கொள்ள கேட்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.04.2026 - 10:28:03
Privacy-Data & cookie usage: