20151111
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியம் கீழப்புலியூர் ஊராட்சியில் சிறுகுடல் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது தலைமையில் இன்று (11.11.2015) மனுநீதி நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அப்பகுதியைச் சேர்ந்த மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், பெண்கள், ஊசி பெரியவர்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகியோரிடம் சுகாதாரம், நியாய விலைக்கடை, குடிநீர், தெரு விளக்கு, சாலை வசதி, கல்வி, போக்குவரத்து வசதி, 108 அவசர ஊர்தி சேவை போன்ற அடிப்படை வசதிகள் குறித்தும், தாட்கோ திட்டம், புதுவாழ்வுத்திட்டத்தின் கீழ் கிராம வறுமை ஒழிப்பு சங்க நடவடிக்கைகள் குறித்தும் தனித்தனியாக கேட்டறிந்தார்.

உங்கள் ஊருக்கு குடிநீர் முறையாக விநியோகிக்கப்படுகிறதா, கிராம செவிலியர்கள் தவறாது தங்கள் பகுதிக்கு வந்து சுகாதாரம் குறித்த அறிவுரைகள் வழங்குகிறார்களா, அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கும், தாய்மார்களுக்கும் சத்துணவு வழங்கப்படுகிறதா என்றும் பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார். அதன் அடிப்படையில் சம்மந்தப்பட்ட அலுவலர்களை நேரடியாக அழைத்து அதற்குரிய விபரங்களை கேட்டறிந்து பொது மக்களிடம் எடுத்துக் கூறினார்.

இந்த முகாமில் திருமண உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேளாண் கருவிகள், இடுபொருட்கள் வழங்குதல், பட்டா மாற்றம், புதிய குடும்ப அட்டைகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் 56 பயனாளிகளுக்கு ரூ.11 லட்சத்து 10 ஆயிரத்து 375 மதிப்பிலான உதவிகளை மாவட்ட ஆட்சியர் தரேஸ்அஹமது வழங்கினார்.

இம்முகாமில் வட்டார வளர்ச்சி அலுவலர் பழனிச்சானமி, உள்பட அரசு அலுவலர்கள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் பொதுமக்கள் கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!