குடும்பத் தகராறு காரணமாக குன்னத்தில் வாலிபர் தற்கொலை

schedule
2015-07-07 | 15:55h
update
2026-06-14 | 17:16h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் : குன்னம் கிராமத்தில் உள்ள அண்ணா நகரைச் சேர்ந்தவர் மருதமுத்து மகன் ஆசைத்தம்பி(23), க்கும் அதே பகுதியை சேர்ந்த ராமலிங்கம் மகள் கவிதா(23), ஆகிய இருவருக்கும் கடந்த ஓர் ஆண்டுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.

இதனிடையே கனவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக கவிதா கைக்குழந்தையுடன் அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

Advertisement

கவிதாவை அழைத்து வர ஆசைதம்பி மாமனார் வீட்டிற்கு சென்றார். அங்கு, மாமனார், மாமியார் ஆசைத்தம்பியை கண்டித்ததாக கூறப்படுகறது.

இதில் மனமுடைந்த ஆசைத்தம்பி தனது தற்கொலைக்கு யார்? யார்? காரணம் என கடிதம் எழுதி வைத்து விட்டு, இன்று காலை சுமார் 7 மணியளவில் அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆசைத்தம்பியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வி.ஏ.ஓ.,அழகேசன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.06.2026 - 17:16:33
Privacy-Data & cookie usage: