குடும்ப தகராறு காரணமாக தீக்குளித்த பெண் உயிரிழப்பு

schedule
2015-12-30 | 08:23h
update
2026-04-22 | 09:32h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்து தீக்குளித்த பெண் மேல்சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

பெரம்பலூர் மாவட்டம் கொளக்காந்தம் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ்(38), சிவசங்கரி(35) தம்பதியினர் இவர்களுக்கு கடந்த 12 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்று குருமூர்த்தி(11), குருபிரசாத்(6)என்ற இரண்டு மகன்களும், குருதர்ஷினி(8) என்ற ஒரு மகளும் உள்ளனர்.

Advertisement

இந்நிலையில் கடந்த 28ந்தேதி வயலுக்கு பூச்சு மருந்து தெளிப்பதற்காக கணவன் செல்வராஜை சிவசங்கரி அழைத்துள்ளார். செல்வராஜ் வர மறுத்ததால் கனவன்
மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த செல்வராஜ், சிவசங்கரியை கண்ணத்தில் அறைந்துள்ளார்.

இதனால் மனமுடைந்த சிவசங்கரி தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதுபற்றி அறிந்த அவரது உறவினர்கள் சிவசங்கரியை உயிருக்கு
ஆபத்தான நிலையில் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதனைத்தொடர்ந்து நேற்று இரவு மேல்சிகிச்சைக்காக திருச்சி கொண்டு செல்லப்பட்ட சிவசங்கரி போகும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடலை குடும்பத்தார் கொளக்காநத்தம் கிராமத்திற்கு கொண்டு இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

இதுபற்றி தகவலறிந்த மருவத்தூர் போலீசார் கொளக்காநத்தம் கிராமத்திற்கு விரைந்து சென்று சிவசங்கரியின் உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனக்காக
பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.04.2026 - 09:33:01
Privacy-Data & cookie usage: