குன்னம் அருகே 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவிலுக்கு கும்பாபிஷேகம்

schedule
2015-06-11 | 17:35h
update
2018-12-13 | 12:59h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர்: குன்னம் அருகே ஆண்டிக்குரும்பலூரில் சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோலில் கும்பாபிஷேம்இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் ஆண்டிக்குரும்பலூர் கிராமத்தில் அமைந்து உள்ள 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த, பிரசித்தி பெற்ற தையல்நாயகி, ஸ்ரீபாலாம்பிகை சமேத வைத்தியநாதசாமி திருக்கோவில் உள்ளது.

மிகவும் சிதலமடைந்த இக்கோவில் ஊர் பொது மக்களால் பல லட்ச ரூபாய் செலவில் புரணமைக்கப்பட்டு, இன்று வெகு விமர்சையாக கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

Advertisement

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 8 தேதி தொடங்கி மகா கணபதி ஹோமம், தனபூஜை நவகிராக ஹோமம், கோ பூஜை மகாபூர்ணாகிதியும், தொடர்ந்து 4 கால யாகசாலை பூஜையும் நடைப்பெற்றது.

காலை கடம்புறப்பாடும் அதன் பின்னர் மகா கும்பாபிசேகமும் நடைப்பெற்றது மாலை மகா அபிசேகமும், திருக்கல்யாணமும், சுவாமி திருவீதி உலாவும் சென்டை மேளம் மற்றும் வான வேடிக்கையுடன் நடைபெற்றது.

இதில் சிவாச்சாரியர்கள் கலந்து கொண்டு புனித ஸ்தலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட நீரை இந்து ஆகம விதிப்படி ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

இதில் ஆண்டிக்குரும்பலூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த எழுமூர், கீழப்புலியூர், பொன்னகரம், அந்தூர், அசூர், பெருமத்தூர், குடிக்காடு, வைத்தியநாதபுரம், வேப்பூர் நன்னை, பரவாய், சித்தளிஉள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
10.04.2026 - 23:21:31
Privacy-Data & cookie usage: