குன்னம் சட்ட மன்ற தொகுதிஅதிமுக வேட்பாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் தீவிர பிரச்சாரம்

schedule
2016-05-08 | 01:08h
update
2026-06-23 | 22:09h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் இன்று குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குரும்பாபாளையம் கிராமத்தில் தனது பிரச்சாரத்தை துவங்கினார்.

பின்னர், வேட்பாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் கொட்டரை, ஆதனூர், மதுராகுடிக்காடு, சீராநத்தம், இலந்தங்குழி, தொண்டப்பாடி, சடைக்கன்பட்டி, அழகிரிபாளையம், மருதையான்கோவில், மேலமாத்தூர், தங்கநகரம், வரிசைப்பட்டி, கீழமாத்தூர், சீதாராமபுரம், மங்களம், அல்லிநகரம், கீழ மற்றும் மேழ உசேன்நகரம், நொச்சிகுளம், புஜங்கராயநல்லூர், ஜெமீன்பேரையூர்
உட்பட 25க்கும் மேற்ப்பட்ட கிராமங்களில் வீதி, வீதியாக நடந்தும், பிரச்சார வாகனத்தில் சென்றும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட்டார்.

Advertisement

பிரச்சாரத்தின் போது,அதிமுக அரசின் 5 ஆண்டுகால சாதனைகள் மற்றும் அதிமுக தேர்தல் அறிக்கையை விளக்கி பேசி தன்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த பிரச்சாரத்தின் போது முன்னாள் துணை சபாநாயகர் அருணாச்சலம்,ஒன்றிய செயலார் என்.கே.கர்ணன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளருக்கு கட்சி தொண்டர்கள் உள்ளிட்ட பொது மக்கள் வெடி வெடித்தும், சால்வை அணிவித்தும், ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்தும் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
23.06.2026 - 22:09:55
Privacy-Data & cookie usage: