குன்னம் சட்ட மன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.டி.இராமச்சந்திரன் வேப்பூர் ஒன்றித்தில் வாக்கு சேகரிப்பு : பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு !

schedule
2016-05-02 | 07:49h
update
2026-06-23 | 16:06h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

குன்னம் சட்ட மன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.டி.இராமச்சந்திரன் வேப்பூர் ஒன்றித்தில் வாக்கு சேகரிப்பு : பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு !

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதி வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பனங்கூரில் அதிமுக கட்சி தொண்டர்களுடன் பிரச்சாரத்தை துவங்கிய ஆர்.டி.இராமச்சந்திரன், வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள மருவத்தூர், பேரளி, சித்தளி, பீல்வாடி, அசூர், அந்தூர், வரகூர், கிளியு_ர், கல்லம்புதூர், ஆய்குடி, எழுமூர், மழவராயநல்லூர், கார்குடி, ஆண்டிக்குரும்பலூர், சின்னபரவாய் கிராமங்களில் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Advertisement

அப்போது வேட்பாளர் ஆர்.டி.இராமச்சந்திரன் பேசியதாவது:

5 ஆண்டு கால அதிமுகவின் சாதனைகளை எடுத்து கூறிய வேட்பாளர் குன்னம் சட்டமன்ற தொகுதியில் உள்ள அனைத்து பொது மக்களின் அடிப்படை தேவைகளையும் எவ்வித பாகுபாடு இன்றியம் நிறைவேற்றுவேன் என்றும், நல்லாட்சி தொடர மக்கள் நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்பட, அதிமுகவின் சின்னமாம் இரட்டை இலைக்கு வாக்களித்து தன்னை வெற்றி பெற செய்ய வேண்டும் என வாக்களாகளிடம் கேட்டுக் கொண்டார்.

வேட்பாளர் பிரச்சாரத்திற்கு சென்ற அனைத்து ஊர்களிலும், பட்டாசு வெடித்தும், பெண்கள் ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்தும், மேயதாளத்துடன் கூடிய உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.

இதில் முன்னாள் துணை சபாநாயகர் வரகூர். அருணாசலம் மற்றும் வேப்பூர் ஒன்றிய நிர்வாகிகள், உட்பட பலர் அங்கு இருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
23.06.2026 - 16:06:23
Privacy-Data & cookie usage: