குரூப் 4 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் : பெரம்பலூர் ஆட்சியர் அறிவிப்பு

schedule
2019-06-11 | 18:20h
update
2019-06-11 | 18:20h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Free Training Courses for Group 4 Exams: Perambalur Collector

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல்:

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள குரூப் 4க்கான பணியிடத்திற்கும் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது.

Advertisement

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், பில்கலெக்டர், சர்வேயர் ஆகிய பணியிடத்திற்கு இலவச பயிற்சி வகுப்புகள் வருகின்ற 13.06.2019 அன்று காலை 10.00 மணி முதல் இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கப்படவுள்ளது. இப்பயிற்சியின் போது இலவசமாக பாடக்குறிப்புகளும், முந்தைய ஆண்டு மாதிரி வினாத்தாள்களும் வழங்கப்படும். மாதிரித் தேர்வுகள் தினமும் நடத்தப்படும்.

இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் தற்போது 13.06.2019 முதல் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் தொடர்பு கொண்டு பதிவு செய்துகொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
20.06.2026 - 19:08:38
Privacy-Data & cookie usage: