குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்த வீடு தேடிச்சென்று ஓ.ஆர்.எஸ் மருந்து வழங்கும் தீவிர விழிப்புணர்வு முகாம் 27.07.2015 முதல் 08.08.2015 வரை நடைபெற உள்ளது

மாவட்ட ஆட்சியர் தகவல்

schedule
2015-07-25 | 18:45h
update
2026-04-16 | 05:45h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்த வீடு தேடிச்சென்று ஓ.ஆர்.எஸ் மருந்து வழங்கும் தீவிர விழிப்புணர்வு முகாம் 27.07.2015 முதல் 08.08.2015 வரை நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சியர் தகவல்.

குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்த வீடு தேடிச்சென்று ஓ.ஆர்.எஸ் மருந்து வழங்கும் தீவிர விழிப்புணர்வு முகாம் 27.07.2015 முதல் 08.08.2015 வரை பெரம்பலூர் மாவட்டத்தல் அனைத்துப் பகுதிகளிலும் நடைபெற உள்ளது.

இம்முகாமில் முதல் வாரம் 27.07.15 முதல் 01.08.15 வரை அங்கன்வாடிப் பணியாளர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் பெரம்பலூர் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று 2 மாத குழந்தை முதல் 5 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளை கணக்கெடுத்தல் அனைவருக்கும் வயிற்றுப்போக்கு நோயிலிருந்து தடுக்க ஓ.ஆர்.எஸ் எனப்படும் மருந்து பொட்டலம் வழங்க உள்ளார;கள்.

Advertisement

அத்துடன் கணக்கெடுப்பின்பொழுது குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு நோய் கண்டறிந்தால் ஓ.ஆர்.எஸ் பவுடருடன், சிங்க் மாத்திரையும் சேர்த்து வழங்கப்படும். மேலும், வயிற்றுப்போக்கை நிறுத்துவதற்கு அறிவுரைகளை வழங்குவார்கள்.

மேலும், வயிற்றுப்போக்கு காலங்களில் ஓ.ஆர்.எஸ் பவுடரை எப்படி பயன்படுத்துவது மற்றும் வீட்டிலேயே உப்புக்கரைசலை எப்படி தயரிப்பது என்பதை பற்றியும் இந்த
முகாமில் தாய்மார்களுக்கு அங்கன்வாடிப் பணியாளர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் எடுத்துரைப்பார்கள்.

இத்திட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் 45,000 குழந்தைகள் பயனடைய உள்ளார்கள்.

இரண்டாவது வாரம் 03.08.15 முதல் 08.08.15 வரை வீடு வீடாக பணியாளா;கள் சென்று தாய்மார்களுக்கு தாய்ப்பாலின் முக்கியத்துவம், எடை குறைந்த குழந்தைகளை கண்டறியவும், கை கழுவும் முறைகள் பற்றியும் எடுத்துரைத்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளனர்.

எனவே, பொது மக்கள் உங்கள் வீடு தேடி வரும் பணியாளா;களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என இவ்வாறு மாவட்ட ஆட்சியர் (பொ) தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.04.2026 - 05:45:38
Privacy-Data & cookie usage: