இது குறித்து விவசாயிகள் தரப்பில் கூறியதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளது மேலப்புலியூர் கிராமம். இக்கிராமத்தில் உள்ள ஏரியை சீரமைத்து தரக்கோரி பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் அதிகாரிகளிடம் மழைக்காலத்திற்கு முன்பே பல முறை மனு கொடுத்து இருந்தோம், ஆனால் அதிகாரிகள் போதுமான அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை.
ஏரிக்கு முக்கிய நீர் ஆதாராமாக இருப்பது பச்சமலையில் வழிந்து வரும் ஓடை நீர்தான். ஆனால், எங்கள் ஏரி 144 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஆக்கிரமப்பால், தற்போது சுமார் 40 ஏக்கர் பரப்பளவிற்கு உருமாறிவிட்டது. மேலும், நீர் வரத்து வாய்க்காலும், ஆக்கிரமிப்பு செய்யப்ட்டுள்ளதால், இந்த மழையிலும் ஏரிக்கு பெற வேண்டிய தண்ணீரை பெறாமல் உள்ளது. மேலும், இந்தாண்டு 500 ஏக்கர் பாசன பரப்பும் பயிர் சாகுபடி குறைய வாய்ப்பு உள்ளது.
எங்களுடைய ஏரிக்கு அடுத்துள்ள இலாடபுரம் ஏரி இந்த தண்ணீரை கொண்டு முழு கொள்ளவையும் எட்டி விட்டது. அதனால், பச்சமலையில் இருந்து வரும் நீரை எங்கள் ஏரிக்கு வராமல் தடுக்கும் ஆக்கிரமிப்புகளை நாங்களே எங்களுடை சொந்த செலவில் அகற்றி கொள்ள அனுமதி அளிக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தாக தெரிவித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.
சுமார் முப்பதிற்கும் மேற்பட்ட விவசாயிகள், பொதுமக்கள், முன்னாள் ஊராட்சித் தலைவர் சிங்கராஜ், இந்நாள் ஊராட்சித் தலைவர் செந்தில்குமார் உட்பலர் உடன் வந்திருந்தனர்.