கோதையாறு பாசனத் திட்ட அணைகளிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவு

schedule
2018-07-07 | 21:35h
update
2026-04-19 | 00:47h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு பாசனத் திட்ட அணைகளிலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறு முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டத்திலுள்ள நிலங்களின் பாசனத்திற்காக வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளை ஏற்று, கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள கோதையாறு பாசனத் திட்ட அணைகளி லிருந்து நெல்லை ராதாபுரம் வட்டத்திலுள்ள நிலங்களின் பாசனத்திற்கு ராதாபுரம் கால்வாய்க்கு நாளை மறுநாள் முதல் 30 நாட்களுக்கு வினாடிக்கு 75 கனஅடி வீதம் மொத்தம் 194.40 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதனால் ராதாபுரம் வட்டத்திலுள்ள 17,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, அதிக உயர் மகசூல் பெற கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.04.2026 - 00:47:55
Privacy-Data & cookie usage: