2016-04-22 சட்டமன்றப் பொதுத்தேர்தல் குறித்து மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்ககைள் குறித்த ஆய்வுக்கூட்டம், தேர்தல் பார்வையாளர்கள் தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.

சட்ட மன்றத் தேர்தலை சிறப்பாகவும், நேர்மையாகவும் நடத்த மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய சிறப்பு பார்வையாளர்களாக பிரசன்ஜித்சிங். மற்றும் சஞ்சிவ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், நடைபெறவுள்ள சட்ட மன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களை கண்காணிப்பதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தால் பெரம்பலூர் மாவட்டத்திற்கு தேர்தல் செலவினப் பார்வையாளராக ராஜேஷ் கவுலி நியமிக்கப்பட்டுள்ளார்.

நடைபெறவுள்ள சட்ட மன்றப் பொதுத் தேர்தல் தொடர்பாக பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்றபாட்டு நடவடிக்கைகள் குறித்தும்,

100 சதவீதம் நேர்மையான வாக்குப்பதிவை நடத்த மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள், தேர்தல் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள பறக்கும்படை, தீவிர கண்காணிப்புக்குழு, தேர்தல் செவினக் கண்காணிப்புக் குழு,

ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு, தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்கும் குழு, வாக்குச்சாவடி அளவிலான விழிப்புணர்வுக்குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்களின் செயல்பாடுகள் குறித்தும்,

பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் பவர்பாய்ண்ட் பிரசன்டேசன் மூலம் விரிவாக எடுத்துரைத்தனர்.

பின்னர், பெரம்பலூர் மாவட்டத்தில் சட்ட மன்றத் தேர்தலில் 100 சதவீதம் நேர்மையான வாக்குப் பதிவை வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியினை தேர்தல் பார்வையாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள் , காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் பார்வையிட்டனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள், மாவட்டங்களின் தேர்தல் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2023 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!