சரிவர பராமரிக்கப்படாத 16 பள்ளி பஸ்களுக்கு தகுதியை வட்டார போக்குவரத்து அதிகாரி ரத்து செய்தார்.

schedule
2016-05-07 | 16:22h
update
2026-06-23 | 22:09h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் பள்ளி பேருந்துகள் கோடை விடுமுறையின் போது வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வு செய்து தகுதிச்சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி பேருந்துகள் ஆய்வு செய்யப்பட்டன. இம்மாவட்டத்தில் மொத்தம் 332 பள்ளி பேருந்துகள் இயங்கி வருகின்றன.

அவற்றில் நேற்று 243 பஸ்களை வட்டார போக்குவரத்து அலுவலர் அறிவழகன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் கருப்பண்ணன் ஆகியோர் மாவட்ட வருவாய் அதிகாரி மீனாட்சி, மாவட்ட கல்வி அலுவலர் வெங்கடாசலபதி முன்னிலையில் மாவட்ட ஆயுதப்படை போலீஸ் வளாகத்தில் ஆய்வு செய்தனர்.

Advertisement

அப்போது பேருந்தினுள் அவசரவழி சரிவர இயங்காமை, வேகக் கட்டுப்பாட்டு கருவி வேலை செய்யாமை மற்றும் சரிவர பராமரிக்கப்படாதது போன்ற பல்வேறு காரணங்களுக்காக 16 பேருந்துகளின் தகுதிச் சான்றிதழை வட்டார போக்குவரத்து அலுவலர் அறிவழகன் ரத்து செய்தார்.

இந்த பேருந்துகள் வாகன விதிமுறைகளுக்கு உட்பட்டு சீர் செய்யப்பட்டால் மட்டுமே மீண்டும் தகுதிச் சான்றிதழ் பெற முடியும். மீதமுள்ள பேருந்துகள் பணி மனைகளில் உள்ளதால், அந்த பஸ்களை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இம்மாதம் 30-ந் தேதிக்குள் ஆய்வு செய்த பிறகு தகுதிச் சான்றிதழ் வழங்கப்படும் என்று மோட்டார் வாகன ஆய்வாளர் தெரிவித்தார்

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
23.06.2026 - 22:09:13
Privacy-Data & cookie usage: