சாலையில் நடந்து சென்றவர்களை மிரட்டி செல்போன் பறித்தவர்கள் கைது

schedule
2018-06-27 | 15:39h
update
2026-05-26 | 17:25h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

சென்னை தியாகராயநகரில் சாலையில் நடந்து சென்றவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி கொள்ளையடித்துச் சென்ற நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான காட்சிகளையும் போலீசார் வெளியிட்டுள்ளனர்.கடந்த 12-ஆம் தேதி இரவு தெற்கு போக் (Boag) சாலையில் நடிகர் சிவாஜி வீட்டுக்கு அருகே ஜார்ஜ் என்பவர் நடந்து சென்றார். இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 4 கொள்ளையர்கள் கத்தியைக் காட்டி கொன்றுவிடுவதாக மிரட்டி செல்போனைப் பறித்துச் சென்றனர். அதுகுறித்த காட்சிகளை போலீசார் தற்போது வெளியிட்டுள்ளனர்.இந்த வழிப்பறிக்கு முந்தைய தினமான 11-ஆம் தேதி இரவே சென்னையில் ஒரே இரவு 14 வழிப்பறிகள் நடைபெற்றன. அதில், சூளைமேடு, நுங்கம்பாக்கத்தில் கொள்ளையில் ஈடுபட்ட அதே கும்பல் 12-ஆம் தேதி முதல் நடைபெறும் ஸ்டார்மிங் ஆபரேஷனில் கைது செய்யப்பட்டது. இந்தநிலையில், அவர்களை, தியாகராயநகர் வழிப்பறி வழக்கிலும் போலீசார் கைது செய்துள்ளனர்.இதனிடையே கைதானவர்களில் இருவர் சூளைமேடு அரும்பாக்கத்தில் கொள்ளையில் ஈடுபட்ட நியமதுல்லா, விரல் கார்த்திக் என்பது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
26.05.2026 - 17:25:13
Privacy-Data & cookie usage: