சுகந்திர தினத்தன்று, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறும் : ஆட்சியர் தகவல்

schedule
2015-08-13 | 12:29h
update
2026-06-16 | 17:41h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆக.15. சுதந்திர தினத்தன்று 121 ஊராட்சிகளிலும், கிராம சபைக் கூட்டம் ஊராட்சித் தலைவர்களால் நடத்தப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது தகவல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

ஆக.15 அன்று நடைபெறவுள்ள சுதந்திர தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் ஊராட்சித் தலைவர்களால் நடத்தப்பட உள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கெனவே நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை 15.8.2015 அன்று நடைபெறும் கிராம சபைக்கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும்.

Advertisement

அனைத்து ஊராட்சித் தலைவர்களும் தாங்கள் செய்த செயல்பாடுகளை கூட்டத்தில் தெரிவித்திட வேண்டும். அரசு அலுவலர்கள் கிராம மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை கேட்டறிதல் வேண்டும். அரசு நலத் திட்டங்களை கூட்டத்தில் வழங்குதல் வேண்டும்.

சுதந்திர தினத்தன்று நடைபெறும் கிராம சபைக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி தலைவர்கள், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் தாங்கள் வாக்காளர்களாக சார்ந்துள்ள கிராம ஊராட்சிகளில் பங்கேற்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கிராம சபைக் கூட்டம் நல்ல முறையில் சீரும் சிறப்புமாக நடைபெறுவதை கண்காணிக்க ஒவ்வொரு ஊராட்சிக்கும் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) அவர்களால் பற்றாளார்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

வட்டாரம் வாரியாக மண்டல அலுவலர்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெறுவதை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளனர்.

இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளும், பொது மக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு கிராம ஊராட்சிகளின் வெளிப்படையான நிர்வாகத்திற்கு வழிவகுத்து தக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.06.2026 - 17:41:40
Privacy-Data & cookie usage: