பெரம்பலூர் : ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் மூலம் 490 அங்கன்வாடி மையங்களின் வாயிலாக கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்கள், 3 வயதுக்குப்பட்ட குழந்தைகளின் உடல் நலத்தினை மேம்படுத்திட இணை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் 4,082 கர;ப்பிணிகள், 3,222 பாலூட்டும் தாய்மார்கள், 18,066 குழந்தைகள் பயன்பெறுகின்றனர்.
ஆலத்தூர் வட்டாரத்தில் வளரிளம் பெண்கள் தன்னுரிமை மேம்பாட்டுத் திட்டத்தின் முதற்கட்டமாக 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வரை பயிலும் மாணவிகளுக்கு உடல்நல பரிசோதனை, இரத்தப் பரிசோதனை உயரம், எடை கண்டறிதல் முகாம் 10.06.2015 முதல் 17.06.2015 வரை நடைபெற்றது.

இதன் தொடர;ச்சியாக கணக்கெடுக்கப்பட்ட 3,050 வளரிளம் பெண்களுக்கும் 136 பள்ளி செல்லா வளரிளம் பெண்களுக்கும் இணை உணவு வழங்க திட்டமிடப்பட்டு அதனடிப்படையில் இன்று 29.06.2015 செட்டிக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வரை பயிலும் வளரிளம் பெண்களுக்கு மாவட்ட ஆட்சி தலைவா; (பொறுப்பு) ப.மதுசூதன் ரெட்டி இணை உணவினை வழங்கினார; அப்போது மாணவிகளிடம் மாவட்ட ஆட்சியர; பேசியதாவது:

ஒவ்வொரு நாளும்; மாலை 4.30 மணிக்கு ஆலத்தூர் வட்டாரத்திலுள்ள அனைத்து நடுநிலைப்பள்ளி, உயர;நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள வளரிளம்; பெண்களுக்கு அந்தந்த பள்ளியில் பயிர் தொண்டு நிறுவனத்தாரால் இனிப்பு உருண்டை, சுண்டல் மற்றும் உலர் நெல்லிக்காய் அளிக்கப்படும். இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வளரிளம் பெண்ணுக்கும் சுமார் 450 கிலோ கலோரி மாவு சத்தும், 12 கிராம் புரதமும் கிடைக்கும்.

வளரிளம் பெண்களிடையே பரவலாக காணப்படும் எடைகுறைவு மற்றும் இரத்தசோகை போன்ற குறைபாடுகள் நீங்கி வளரிளம் பெண்கள் உயரத்திற்கேற்ற எடை மற்றும் ஆரோக்கியத்துடன் விளங்க இத்திட்டம் தூண்டுகோலாக இருக்கும்.
இத்திட்டத்தின் தொடர்ச்சியாக ஒவ்வொரு வகுப்பிலிருந்தும் 2 வளரிளம் பெண்களை தேர்வு செய்து அவர்களுக்கு ஊட்டச் சத்து மற்றும் சுகாதார கல்வி, பொது சேவைகளை பெறும் முறை, ஈ.எம்.ஐ., கணக்கிடுதல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.

மேலும் ஆலத்தூர் வட்டாரத்தில் 30 வளரிளம் பெண்களை தேர்வு செய்து அவர்களுக்கு வாழ்க்கை திறன் கல்வி குறித்தும் பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.

இவ்வாறு பயிற்சி அளிக்கப்படும் மாணவிகள் மூலம் அவர்கள் வகுப்பிலுள்ள மற்ற மாணவிகளுக்கு இப்பொருள் குறித்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, வளரிளம் பெண்கள் இத்திட்டத்தினை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பேசினார்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!