சென்னையில் கடத்திய லாரி வாலிகண்டபுரம் அருகே சிக்கியது. லாரியில் ஜி.பி.எஸ் பொருத்தப்பட்டிருப்பது தெரியாமல் கடத்திய திருடர்கள்! 2 பேர் கைது,

schedule
2015-09-20 | 13:50h
update
2026-04-19 | 12:12h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் : சென்னையிலிருந்து கடத்தி வரப்பட்ட லாரியை மங்கலமேடு போலீஸார் வாலிகண்டபுரம் அருகே மடக்கி பிடித்து பறிமுதல் செய்தனர்.

சென்னையிலிருந்து கடத்தி வரப்பட்ட லாரி ஒன்று பெரம்பலுார் மாவட்டம் வாலிகண்டபுரம் என்ற இடத்தில் லாரி நின்றுக்கொண்டிருப்பதாக ஜி.பிஎஸ்., கருவி மூலம் தெரியவந்ததாக சென்னை பூக்கடை போலீஸ் ஸ்டேஷனிலிருந்து பெரம்பலுார் மாவட்டம் மங்கலமேடு போலீஸாருக்கு இன்று காலை 9 மணியளவில் தகவல் வந்தது.

Advertisement

இதையடுத்து மங்கலமேடு போலீஸார் வாலிகண்டபுரம் கிராமத்தில் நின்றுக்கொண்டிருந்த லாரியை சுற்றி வளைத்ததனர். அப்போது லாரியில் இரு்ந்த இரண்டு பேரை கைது செய்தனர்.

விசாணையி்ல் திருச்சியை சேர்ந்த முருகேசன் மகன் ராஜ்குமார் (29), கேரளா மாநிலம் இடப்பட்டிகாலா பகுதியை சேர்ந்த மணிவர்த்தி மகன் முகேஷ் (25), ஆகியோர் என்பதும் இவர்கள் இருவரும் சேர்ந்து லாரியை கடத்தி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இது குறித்து மங்கலமேடு இன்ஸ்பெக்டர் ஜெஸ்சிட்மேனுவேல் வழக்கு பதிந்து மேலும் விசாரிக்கிறார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.04.2026 - 12:12:46
Privacy-Data & cookie usage: