பெரம்பலூர் : செப். 1 முதல் 21 ஆம் தேதி வரை கால் வாய்நோய் தடுப்பூசிப்பணி நடைபெறும் கிராமங்கள் விபரம் – மாவட்ட ஆட்சியர் தகவல்

அதன் விபரம் வருமாறு:

கால்நடைகளை தாக்கும் முக்கிய நோய்களில் ஒன்று கால்நோய் வாய்நோய் என்கிற கோமாரி (கசப்பு) நோய், இந்நோய் 63 வகையான வைரஸ் கிருமிகளால் பரவுகிறது. மழைக்காலத்திலும், பனிக்காலத்திலும் இக்கிருமியானது தண்ணீர் மூலமாகவும், காற்றின் மூலமாகவும் மிக விரைவில் பரவக்கூடியது.

இந்நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளில் வாயிலும், நாக்கிலும் கால் புண்கள் ஏற்படும். அவைகள் தீனி உட்கொள்ளமுடியாமல் மிகவும் பாதிக்கப்படும். மிகவும் மெலிந்துவிடும். வெயில் காலத்தில் நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகள் மூச்சிரைக்கும், தோலின் தன்மை கடினமாகவும், மேல்தோல் முடிகள் அதிகம் வளா;ந்தும் காணப்படும். பால் கறவை குறையும். கறவைப்பசுக்களில் பால் குடித்துவரும் கன்றுகள் உடனடியாக இறந்துவிடும்.

எனவே இந்நோய் தாக்காவண்ணம் இருப்பதற்கு மாடுகளுக்கு வருடத்திற்கு இருமுறை தடுப்பூசிப் பணிமேற்கொள்வது ஒன்றே சிறந்த வழி என்பதால் பெரம்பலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை கால் வாய்நோய் தடுப்பூசிப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 1.09.2015 அன்று பாளையம் மாரியம்மன் கோவில், பாளையம் காலனி, குரும்பலூர், குரும்பலூர் ஆப்ரான் கோவில், குரும்பலூர் காலனி ஆகிய பகுதிகளிலும்,

2.9.2015 அன்று ஈச்சம்பட்டி நடுநிலைப்பள்ளி, ஈச்சம்பட்டி புதுஆத்தூர், ஈச்சம்பட்டி மூலக்காடு, நெடுவாசல், நெடுவாசல், மேட்டாங்காடு, கே.புதூர் மாரியம்மன் கோவில், குரும்பலூர், மூலக்காடு ஆகிய பகுதிகளிலும், 3.9.2015 அன்று கே.புதூர் காட்டுப்பகுதி, நாவலூர் எறைய சமுத்திரம், திருப்பெயர், நாவலூர், மேலப்புலியூர் ஆகிய பகுதிகளிலும்,
4.9.2015 அன்று க.எறையூர், மேலப்புலியூர், சரவணபுரம், பால்பண்ணை, சரவணபுரம் காட்டுப்பகுதி, களரம்பட்டி ஆகிய பகுதிகளிலும்,

5.9.2015 அன்று கல்பாடி, கல்பாடி, செங்குணம், அருமடல், பாலாம்பாடி, கவுள்பாளையம் ஆகிய பகுதிகளிலும், 6.9.2015 அன்று சிறுவாச்சூர் (மேற்கு) பகுதியிலும், 7.9.2015 அன்று சிறுவாச்சூர் (கிழக்கு), பெரம்பலூர் பகுதியிலும் முகாம் நடைபெறவுள்ளது.

வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றித்தில் 1.09.2015 அன்று வெங்கலம் (வடக்கு), வெங்கலம் (தெற்கு), கிருஷ்ணாபுரம் (கிழக்கு), கிருஷ்ணாபுரம் (மேற்கு),கிருஷ்ணாபுரம் (வடக்கு), வெண்பாவூர் (கிழக்கு), வெண்பாவூர்(மேற்கு) ஆகிய பகுதிகளிலும்,

2.9.2015 அன்று பெரியவடகரை, வி.மாவிலங்கை, பாண்டகப்பாடி ஆகிய பகுதிகளிலும்,

3.9.2015 அன்று அய்யனார்பாளையம், பில்லங்குளம், நெற்குணம் ஆகிய பகுதிகளிலும்,

4.9.2015 அன்று நெற்குணம் காலனி, பசும்பலூர் ரோடு, நூத்தப்பூர் ஆகிய பகுதிகளிலும்,

5.9.2015 அன்று பூலாம்பாடி, பாரதிநகர், மல்லிகைபுரம், 6.9.2015 அன்று கடம்பூர், மேலக்குணங்குடி, பெரியம்மாபாளையம்,

7.9.2015 அன்று வெங்கனூர், உடும்பியம் , கள்ளப்பட்டி , ஆகிய பகுதிகளிலும் சிறப்பு முகாம் நடத்தப்படும்.

வேப்பூர் ஊராட்சி ஒன்றித்தில் 1.9.2015 அன்று பெரியம்மாபாளையம், மூங்கில்பாடி, அந்தூர், கிளியூர்

2.9.2015 அன்று குன்னம் (கிழக்கு), கரம்பியம், வரகூர் (கிளை நிலையம்), வரகூர் காலனி, குன்னம் (சொசைட்டி), குன்னம் மருந்தகம்,

3.9.2015 அன்று ஆண்டிக்குரும்பலூர், ஆண்டிக்குரும்பலூர், குளக்கரை, வைத்தியநாதபுரம், வைத்தியநாதபுரம் சொசைட்டி, பரவாய், சின்னபரவாய், கல்லம்புதூர்,

4.9.2015 அன்று வேப்பூர் (அய்யனார் கோவில்), வேப்பூர் (மருந்தகம்), வேப்பூர் (காலனி), வேப்பூர் (மேற்கு), நன்னை, நன்னை (காலனி), சாத்தநத்தம், கிளியூர்,

5.9.2015 அன்று ஓலைப்பாடி (காலனி), ஓலைப்பாடி (மேற்கு), ஓலைப்பாடி (வடக்கு), கல்லை, காரைப்பாடி,

6.9.2015 அன்று பெரியவெண்மணி, சின்னவெண்மணி(கிழக்கு), சின்னவெண்மணி (மேற்கு), கொத்தவாசல், புதுக்குடிசை, நல்லறிக்கை (கிழக்கு),

7.9.2015 அன்று நல்லறிக்கை (மேற்கு), புதுவேட்டக்குடி (கிழக்கு), புதுவேட்டக்குடி (மேற்கு), புதுவேட்டக்குடி (காலனி), புதூர், துணிஞ்சப்பாடி ஆகிய பகுதிகளிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

ஆலத்தூர் ஊராட்சி ஒன்றித்தில் 1.9.2015 அன்று எலந்தலப்பட்டி, அடைக்கம்பட்டி, கூடலூர், இலுப்பைகுடி,

2.9.2015 அன்று அடைக்கம்பட்டி (பால்பண்ணை), அடைக்கம்பட்டி (அம்மன் கோவில்), அடைக்கம்பட்டி (பள்ளிக்கூடம்), பிலிமிசை, கூத்தூர், வரகுபாடி (கிழக்கு),

3.9.205 அன்று நக்கசேலம் (ஊராட்சி அலுவலகம்), நக்கசேலம் (மேற்கு காலனி), நக்கசேலம் (காட்டு கொட்டகை), குறிஞ்சிப்பாடி, மாக்காய்குளம், வரகுபாடி (மேற்கு),

4.9.2015 அன்று நக்கசேலம் (கிழக்கு காலனி), புது அம்மாபாளையம், ஈச்சம்பட்டி, அருணகிhpமங்கலம், மேலமாத்தூர் (கிழக்கு), சாத்தனூர்,

5.9.2015 அன்று புதுவிராலிப்பட்டி, பழைய விராலிப்பட்டி, மேலமாத்தூர் (மேற்கு), மேலமாத்தூர் (காலனி தங்கநகரம்), 6.9.2015 அன்று கண்ணப்பாடி (ஊராட்சி அலுவலகம்), கண்ணப்பாடி (கிழக்குகாலனி), நத்தக்காடு, ஆதனூர்(கிழக்கு), ஆதனூர் (மேற்கு), 7.9.2015 அன்று தேனூர் (ஊராட்சி அலுலகம்), தேனூர் (பள்ளிக்கூடம்), தொட்டியப்பட்டி, இலந்தங்குழி (மேற்கு), இலந்தங்குழி (கிழக்கு சீராநத்தம்) ஆகி பகுதிகளிலும் கால்நடைகளுக்கு வாய்நோய் தடுப்பூசிப்பணி முகாம் நடைபெற உள்ளது.

இம்முகாம் தொடர்பான மேலும் விபரங்களுக்கு கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் ஜி.அப்சலை 9443397019 என்ற எண்ணிலும், உதவி இயக்குனர் தமனோகரனை 9442161511 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் நடக்கும் இந்த முகாம்களை முறையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர; டாக்டர;.தரேஸ் அஹமது.இ.ஆ.ப., அவர;கள் தெரிவித்துள்ளார;.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!